அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! முதல் இசைக்கருவி!அடர்ந்த காடுகளுக்குள் மனிதன், விலங்குகளை வேட்டையாடித் திரிந்த காலத்தில் நாடோடியாகவே வாழ்ந்தான். உணவுக்காக அடிக்கடி இடம் மாறினான். பின்னர் குகைகளில் வாழ்வதற்கு கற்று கூட்டம், கூட்டமாக அவற்றில் வசித்தான். பகல் நேரத்தில் ஆண்கள் அனைவரும் வேட்டையாடுவதற்கு செல்லும் நிலையில் பெண்களும், குழந்தைகளும் அங்கு தங்கினர்.வேட்டைக்கு போன ஆண்கள், மாலை நேரம் தொடங்கியதுமே திரும்பி வந்து விடுவர். ஏனெனில், இருள் சூழ்ந்து விட்டால் அவர்கள் வசிக்கும் குகை எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்வது மிகவும் கடினம். சில நேரங்களில் அப்படி திண்டாடியவர்களும் இருக்கின்றனர். வேட்டையாடிய விலங்குகளின் உடல்களை சுமந்தவாறு இரவு முழுவதும் குகை தெரியாமல், கூச்சலிட்டபடி அலைவர். பின்னர், விடியல் வந்த பிறகுதான் அவர்கள் குகைகளை அடையாளம் காண்பர்.இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக ஆதிவாசிகள் கண்டுபிடித்த மாற்று வழிதான் பறை. விலங்குகளின் தோலை எடுத்து பறை செய்து அவர்கள் வசிக்கும் குகைக்கு அருகிலுள்ள மரத்தின் உச்சியில் கட்டினர்.மாலை நேரம் ஆனதும் ஒரு குறிப்பிட்ட நபர் மரத்தின் மீது ஏறி அந்த பறையில் ஒலியை ஏற்படுத்துவார். அந்த குகையில் இருந்து வேட்டைக்கு சென்ற அனைவரும் வந்து சேரும் வரை அந்த பகுதி யில் பறையொலி கேட்டுக் கொண்டே இருக்கும்.அத்துடன் பறையொலியை கேட்ட புலி, சிங்கம், போன்ற மிருகங்கள் குகை இருக்கும் திசையை நெருங்காமல் மிரண்டு ஓடின. இதனால் அதில் வசித்தவர்கள் நிம்மதியாக உறங்கினர். இதன்படி மனிதன் கண்டுபிடித்த முதல் இசைக்கருவி பறைதான்.பிற்காலத்தில் வெண்கலம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மணிகள் உருவாக்கப்பட்டன. உயரமான இடங்களில் அவற்றை கட்டி வைத்து ஒலிக்கச் செய்தனர். இதனால் பறை பின்னுக்குத் தள்ளப்பட்டது. காட்டு வழியாக நடந்து செல்பவர்களுக்கு தூரத்தில் ஒரு கிராமம் உள்ளது என்பதை இந்த மணியோசைதான் தெரியப்படுத்தியது. பிற்காலத்தில் மணிகள் கோவில்களிலும் ஒலிக்கத் தொடங்கின. அது இன்றும் தொடர்கிறது.இதெல்லாம் என்னப்பா?* ஏ.டி.எம்.,லேர்ந்து ரூபாய் நோட்டு எடுக்கலாம். கோடு போட்ட ஒரு குயர் நோட்டு எடுக்க முடியுமா?* வாழைப்பழத்தை சீப்பா வாங்கலாம். ஆனா, சீப்பை வாழைப்பழமா வாங்க முடியாது.* நாய், பூனையை செல்லப்பிராணியா வளர்க்கலாம். ஆனா, யாராலயும் சாம்பிராணியை செல்லப்பிராணியா வளர்க்க முடியாது.அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!இது புதுவிதமான ஸ்நாக்ஸ். 'பழபத்திரி'தேவையானவை: நேந்திரம் பழம் -1, மைதா மாவு - 100 கிராம், சோடா உப்பு - சிறிதளவு, சர்க்கரை - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: மைதா மாவுடன், சிறிதளவு உப்பு, சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கரைக்கவும். நேந்திரம் பழத்தை நீளவாக்கில் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி மைதா மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த பின் அவற்றின் மேல் சர்க்கரையை லேசாகத் தூவிப் பரிமாறவும். சுவையான பழபத்திரி அனைவரையும் கவரும்.என்றென்றும் அன்புடன், அங்குராசு.