உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!யானை வரும் பின்னே மணிஓசை வரும் முன்னே!தமிழகத்தில், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, நெல்லை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளிலும், மூன்றாயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த, சில ஆண்டுகளாக மழை பெய்வது குறைந்து விட்டது. பருவமழை குறைவால், வறட்சி ஏற்பட்டு, யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்துள்ளது. அதிக வெப்பம் யானைகளுக்கு ஒத்துக் கொள்வதில்லை.எவ்வளவு வறட்சி ஏற்பட்டாலும், யானைகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்படாது. வாழ்நாளில், எத்தனையோ வறட்சிகளை கண்டவை; அதற்கு தகுந்தாற் போல, இடம் பெயர்ந்து வாழ பழகியுள்ளன. பருவத்துக்கு தகுந்தபடி, உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளும். வறட்சியின் போது, ஒரு தமிழக யானை, 600 முதல், 650 சதுர கி.மீ., பரப்புக்குள் இடம் பெயரும். உணவாக, 80 சதவீதம் புற்களைத் தான் உட்கொள்ளும். புல்லின் வேர்ப்பகுதியில், நிறைய மண் இருக்கும். மண்ணோடு புல்லை தின்றால், பற்கள் தேய்மானம் அடையும். யானைகளுக்கு, பல்தான் உயிர் நாடி. பல் போனால், ஆயுள் முடிந்து விடும். மழை நேரத்தில், புல்லைப்பிடுங்கி, வேரை அப்புறப்படுத்தி, புல்லை மட்டும் தின்னும். வெயில் காலத்தில், புற்கள் காய்ந்து விடும்; சாப்பிட தகுதியாக இருக்காது. அதனால், காய்ந்த புல் இதழையும், வேரில் படிந்த மண்ணையும் உதறி, வேரை மட்டும் சாப்பிடும்.வெயில் காலத்தில், போதிய உணவு கிடைக்காது; அப்போது, மரப்பட்டையை உரித்து தின்னும். இயற்கையாகவே, கோடைகாலத்தில், எலும்பு தெரியும்படி, யானையின் உடல் மெலிந்துவிடும். கண்ணாடி பள... பளக்க...* முகம் பார்க்கும் கண்ணாடிகளை, வேக வைத்த உருளைக் கிழங்கு தோலால் துடைத்தால், உடனடியாக பள பளக்கும்* சிறு தேங்காய்த் துண்டைப் போட்டு வைத்தால், தயிர் புளிக்காது* வாழைத் தண்டை நறுக்கியதும், உப்பு கலந்த மோரில் போட்டு விட, தண்டின் நிறம் மாறாது; துவர்ப்பும் மட்டுப்படும்* கர்ப்பிணிகள், காரட் சாறும், சிறிது தேனும் கலந்து பருகி வந்தால், வாந்தி கட்டுப்படும்* வாழைத் தண்டு சாறு குடித்தால், உடல் பருமன் குறையும்* துளசி இலையை, தண்ணீரில் போட்டு வைத்து, பிறகு குடித்தால், வாசனையாக இருக்கும்; ஜலதோஷம் பிடிக்காது.மூளைக்கு!பல வண்ண செயற்கை உணவுகள், இனிப்பு கலந்த குளிர்பானங்கள், மது போன்றவை, மூளைக்கு ஏற்றவை அல்ல; இவை, மூளையின் செயல்திறனைக் குறைத்து விடும்.மூளையில் உள்ள, சாம்பல் நிற செல்கள், சுறு சுறுப்பாக செயல்பட, ஒமேகா - 3, கொழுப்பு, அமிலம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இவ்வாறு கிடைக்கும் சத்துக்கள், நரம்பு செல்களில் தடை இன்றி, ரத்தம் செல்ல உதவுகிறது.இந்த சத்துக்கள் நிறைந்த உணவு மீன். எனவே, வாரம் இருமுறை, மீன் சாப்பிடலாம். சைவ உணவு சாப்பிடுவோர், வாழைப்பழம், பிரக்கோலி, தவிடு நீக்காத அரிசி, பருப்பு போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இவை மூளைக்கு ஏற்றவை.- என்றென்றும் அன்புடன், அங்குராசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !