உள்ளூர் செய்திகள்

நலம் தரும் நவராத்திரி!

தீமைகளை அழித்து மக்களை காக்க தேவி பல அவதாரங்களை எடுத்தாள். சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் தேவர்களை வருத்திய போது, அவர்கள் பராசக்தியிடம் முறையிட, அவள் விஸ்வரூபம் எடுத்து, அவர்களை வதைத்து, தேவர்களை காத்தாள் என்பது புராண கதை.அம்மன் மூலமாக பெண்களின் ஆற்றலை எடுத்து சொல்லும் ஒரு மகத்தான பண்டிகையாக, நவராத்திரியை வகுத்தனர் நம் முன்னோர்கள். இந்த ஒன்பது நாட்களிலும் பெண்கள் விரதம் இருந்து, அம்மனை பூஜை செய்து தங்கள் ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். சக்தியை வழிபட்டால், சக்தி கிடைப்பதோடு சங்கடங்களும் தாமே விலகும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !