வாழை இலை மகத்துவம்!
விசேஷ நிகழ்வுகளின் போது, வாழை இலையில் உணவு பரிமாறும் வழக்கம் உள்ளது. இதில் பல நன்மைகள் உள்ளன. வாழை இலையில் உள்ள பச்சையம், 'குளோரோபில்' எனப்படுகிறது. இது உடலில் நச்சுத் தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். உணவை எளிதில் ஜீரணிக்க செய்யும். வாழை இலையில் உள்ள, 'பாலிபீனால்' இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்க வல்லது. வாழை இலையில் வைட்டமின் - ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உணவுடன் சேர்ந்து ஆரோக்கியம் தரும். வாழை இலையில் இளம் சூடாக உணவை பரிமாறும் போது ருசி அதிகரிக்கும். தொடர்ந்து உணவு உட்கொண்டால் தோல் பளபளப்பு அடையும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். பித்தமும் தணியும். நோயின்றி நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழலாம். வாழை இலையில் சாப்பிட்ட பின், அது வீணாகாது; ஆடு, மாடுகளுக்கு உணவாகும். சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாது. தீப்புண் காயத்தை ஆற்றுவதில் அருமருந்தாக வாழை இலை செயல்படுகிறது. வாழை இலையில் உணவு சாப்பிடும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். நல்வாழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது வாழை.- என்.சாந்தினி