பாக்ஸ் மேட்டர்
பகீரா கிப்லிங்கிமெக்ஸிக்கோ மற்றும் மடகாஸ்கர் பகுதியில் குதிக்கும் சிலந்தி ஒன்றை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இது அக்கேஸியா என்ற தாவரத்தின் இலை, மொட்டு மற்றும் பூக்களை உணவாக உண்கிறது.இந்த சிலந்தி 5 முதல் 6 செ.மீ., நீளம்வரை உள்ளது. முதிர்ந்த அக்கேஸியா இலைகளின் மீது வாழ்கிறது. இதை 'பகீரா கிப்லிங்கி' என்று அழைப்பர்.அக்கேஸியாவின் மொட்டை எளிதில் இந்த சிலந்தியால் சாப்பிட முடியாது. அங்கே காவல் எறும்பு ஏராளம் உள்ளது. சிலந்தி அக்கேஸியாவின் தண்டில் உள்ள பள்ளத்தில் மறைந்து வாழ்கின்றது. சிலந்தி காவல் எறும்புகளை கடந்து சென்றுதான் தன் உணவை சாப்பிட வேண்டும். இதுவரை ஆராய்ச்சியாளர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலந்தி வகைகளை கண்டுப்பிடித்துள்ளனர். ஆனால், 'பகீரா கிப்லிங்கி' சிலந்தி மட்டும்தான் தாவர உண்ணி.*** ரத்தக்கசிவு!ரத்தமே நம் உடலிலுள்ள எல்லா திசுக்களுக்கும் பிராணவாயுவைக் கொண்டு செல்கிறது. அதிகப்படியான ரத்தக்கசிவு உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். எனவே, அதற்கு தீவிர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால்தான், நமது உடலில் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நுட்பமான அமைப்பு இயற்கையாகவே இருக்கிறது. மேலும், ஓர் ஆரோக்கியமான இளைஞன் உடலிலிருந்து 850 மி.லி., ரத்தம் வெளியேறினாலும் அவனுக்கு எந்தவொரு தீங்கும் நேராது. ஆனால், அவசரகாலத்தில் அடிபட்ட ஒருவரது உடலிலிருந்து எவ்வளவு ரத்தம் வெளியேறும் என்று துல்லியமாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். ஆகவே, முதலுதவி செய்பவர் எல்லா வழிகளிலும் ரத்தக் கசிவை நிறுத்தவே முயற்சிக்க வேண்டும்.காயத்தின் தன்மையைப் பொறுத்து ரத்தக்கசிவின் அளவு மாறுபடும். வெளிக்காயம் கண்ணுக்குப் புலப்படுமாறு தோலின்மீது காணப்படும். உள்காயம் என்றால் திசுக்களுக்கு ரத்தம் செல்வது தடைப்படும். வெளிக்காயத்தினால் உண்டாகும் ரத்தக் கசிவிற்கு புற ரத்தக்கசிவு என்றும் உள்காயத்தினால் உண்டாகும் ரத்தக் கசிவிற்கு அக ரத்தக்கசிவு என்றும் பெயராகும்.முடிந்தவரையில் உங்கள் நலத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் உடலில் ஏதேனும் வெளிக்காயம் இருந்ததென்றால், அக்காயம் அடிபட்டவர் காயத்தின்மீது படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.*** முதலுதவி:1. அடிப்பட்டவர் மயங்கிவிடாமல் இருக்க முதலில் அவரைக் கீழே படுக்க வைக்கவும்.2. காயத்தின்மீது படிந்திருக்கும் ஆடையை நீக்கி விடவும். காயத்தினுள் கண்ணாடி போன்ற அன்னியப் பொருட்கள் இருக்கிறதா என்று சோதிக்கவும்.3. அப்படி ஒன்றும் இல்லையென்றால், காயத்தின் மேல்பகுதியில் நன்கு அழுத்தியும், காயம்பட்ட பாகத்தை சிறிது உயர்த்திப்பிடித்தும் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தவும்.4. காயத்தை சுத்தமான துணியால் குறைந்தது 10 நிமிடம் அழுத்திப் பிடிக்கவும்.5. இரண்டு கைகளின் மூட்டுகளுக்கு மேலும் இரண்டு கால்களின் இடைப்பகுதியிலும் உள்ள 4 தமனிகளை விரலால் அழுத்தவும்.6. ஆனால், கழுத்து, தலை, உடல் காயத்திற்கு இவ்வாறு செய்யக்கூடாது.7. ரத்தக்கசிவை நிறுத்த மட்டுமே முயற்சிக்கவும். உடைந்து போயிருக்குமோ என்று சந்தேகப்படும் பாகத்தை எதுவும் செய்யாதீர்கள்.8. காயத்தின்மீது அசுத்தமான கைகள் மற்றும் துணியை வைக்கக் கூடாது. தொற்று நோய்க் கிருமிகள் பற்றி விடாமல் இருக்க காயத்தின்மீது கட்டுப்போடவும்.9. கட்டுப்போட்ட பாகத்தின் இறுதியில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்று பார்க்கவும்.10. நீங்கள் போடும் கட்டுத்துணி ரத்தத்தினால் ஈரமான போதிலும் அதை மாற்றாதீர்கள். மாறாக அதன் மேலேயே மேலும் மேலும் கட்டுப்போடுங்கள்.***