பிரண்டை வற்றல்!
தேவையான பொருட்கள்:பிரண்டை - 100 கிராம்மோர் - 250 மி.லி.,கல் உப்பு - தேவையான அளவு.செய்முறை:பிரண்டையை கணு நீக்கி, சிறு துண்டுகளாக்கவும். மோரில் உப்பு கலந்து, பிரண்டை துண்டுகளை அதில் போடவும். மூன்று நாட்கள் ஊற விடவும். பின், பிரித்து எடுத்து, வெயிலில் நன்றாக உலர்த்தி வற்றலாக்கவும். சுவை மிக்க, 'பிரண்டை வற்றல்' தயார். தேவைப்படும் போது, எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். ஜீரணக் கோளாறுகளை நீக்க வல்லது. - சவுமியா சுப்ரமணியன், சென்னை.