உள்ளூர் செய்திகள்

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (11)

ஹலோ டியர்ஸ்... இப்போதுதான் ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கிறோம். சரியா? ரெடி ஆகிவிட்டீர்கள்தானே...இனி நாம் வாக்கியங்கள் அமைக்கப்போறோம். எந்த ஒரு செயலையும் செய்ய ஒரு நபர் தேவை. அதே போல நாம் செய்யும் செயல்களைப் பற்றி குறிப்பிட வினைச்சொல் தேவை.ஒரு செயலை நான் செய்தால் அது First Person செய்யும் செயல், First Person ஆகிய நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே, நான் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள்தான் Second Person. நாம் இருவரும் சேர்ந்து Third Person ஆகிய அதாவது மூன்றாவது நபரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த நபர் அங்கே இல்லை. அவனோ, அவளோ அல்லது அதுவோ... இவர்கள்தான் Third Person சரியா?உதாரணம்:நான் எழுதுகிறேன் - First Person நீ எழுதுகிறாய் - Second Personஅவர்கள் எழுதுகின்றனர் - Third Person சரி... அடுத்து இந்தச் செயல்கள் எந்த காலத்தில் நடந்தது என்பதை பார்ப்போம்.1. நான் பாடம் படிக்கிறேன்.2. நான் பாடம் படித்தேன்.3. நான் பாடம் படிப்பேன்.முதல் வாக்கியம் நிகழ்காலத்தை குறிக்கிறது. Present tense.இரண்டாவது வாக்கியம் கடந்த காலத்தை குறிக்கிறது. Past tense.மூன்றாவது வாக்கியம் எதிர்காலத்தைக் குறிக்கிறது. Future tense.அடுத்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. சில செயல்கள் வழக்கமாக நடைபெற்று வரும். சில செயல்கள் நடந்து முடிவடைந்திருக்கும். சில செயல்கள் இனிமேல்தான் நடைபெற வேண்டும் என்ற நிலை. இன்னும் சில செயல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி அது இன்றும் நடந்து கொண்டிருக்கும். 'அய்யோ மிஸ்... தலையை சுத்துதே...' என கத்துவது எனக்குப் புரியுது.இப்போ ஒரு கட்டடம் கட்ட ஆரம்பித்து அந்த செயல் இன்றும், நாளையும்... ஏன் இன்னும் சில காலங்களுக்கு தொடரும். அப்படிப்பட்ட செயல்களை எந்த காலத்தில் சேர்ப்பது? அவற்றை எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்பதைப் பற்றித்தான் சொல்கிறேன். சரியா? ஓ...! இப்போ கொஞ்சம் புரியுது 'வர்ஷி மிஸ்' என்கிறீர்களா?என்னோட புத்திசாலி மாணவர்களுக்கு நான் சுலபமா சொல்லித்தர்றேன்... சரியா?இந்த காலகட்டங்களை ஆங்கிலத்தில் 12 பிரிவுகளாக பிரிப்பர். இது கொஞ்சம் கஷ்டம்தான் இந்தப் பிரிவுகளை உங்கள் மனதில் அடிக்கடி படித்துப் படித்து நன்கு பதியவைத்துக் கொண்டாலே போதும். மாணவர்களே... நீங்க எங்கோ போயிடுவீங்க... சரியா?உங்களுக்கு புரிகிற மாதிரி ரொம்ப ஈஸியா கத்துத்தரப்போறேன். இங்கிலீஷ் பேசணும்னு ஆசை இருக்குத்தானே... அப்போ கஷ்டப்பட்டு படிக்கணும்... சரியா?பேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!1. I am feeling sleepy - எனக்கு தூக்கம் வருகிறது.2. Go and sleep now - இனி போய் தூங்கு.3. I am dead tired - நான் மிகவும் களைத்திருக்கிறே.4. Bolt the door - கதவைத் தாளிடு.5. Its time to start now - இது கிளம்பும் நேரம்.6. Move aside - ஒரு புறமாக நில்.7. Use your intelligence - மூளையைப் பயன்படுத்து.பை! பை! ஸீயு நெக்ஸ்ட் வீக்வர்ஷிதா மிஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !