உள்ளூர் செய்திகள்

களைப்பின் காரணங்கள்!

என்னன்னு தெரியலை; ஆனால், உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறது என்று நம்மில் பல பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா பட்டூஸ்!* உணர்ச்சிவசப்படுதல், மனத்தளர்ச்சி, மற்றும் அதிக எதிர்பார்ப்புகள் போன்றவைகளால் களைப்பு ஏற்படும்.* அதிக உழைப்பால் லாக்டிக் அமிலம், கரியமில வாயு போன்ற கழிவு பொருள்கள் அதிகளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை எளிதில், களைப்படைய வைக்கும்.* அவசரமாக உண்பதாலோ, சரியாக உண்ணாமையாலோ உடலில் சர்க்கரை சத்து குறைவு ஏற்பட்டு களைப்பு உண்டாகும்.* அதிக உடற்பயிற்சி, குறைந்த தூக்கமும் களைப்பு ஏற்பட காரணமாகும்.* குறைந்த காலத்துக்குள் பிறக்கிற குழந்தைகள், வளர்ந்ததும் எளிதில் அதிகம் களைப்படைகின்றனர் என்று சமீபத்திய கண்டுபிடிப்பு சொல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !