திருந்தச் செய்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, சவுராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில், 1959ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பு தலைவனாக இருந்தேன். மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கும் கட்டுரை நோட்டுக்களை சரி பார்த்து, அடுக்கி வைப்பது, கரும்பலகையில் தேதி, பாட விவரங்களை எழுதி வைக்கும் பணிகளை செய்ய வேண்டும்.ஒருநாள், உடல் நலக்குறைவால், இதை செய்ய தவறி விட்டேன். மறுநாள் வகுப்பில், பழைய தகவல்களுடன் கரும்பலகையைக் கண்ட ஆசிரியர் ராமபிர்மம், 'பணியை சரியாக நிறைவேற்றுபவர் தான், நல்ல தலைவராக இருக்க முடியும்...' என்று கடிந்து, தண்டனையாக, 'செய்வன திருந்தச்செய்' என்ற ஆத்திச்சூடியை, 100 முறை எழுத சொன்னார். அவர் புகட்டிய பாடம், பசுமரத்தாணி போல், நெஞ்சில் பதிந்துள்ளது.என் வயது, 65; மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். அந்த ஆசிரியர் வலியுறுத்திய அறத்தை, கடைபிடித்து வருகிறேன். ஒழுக்கம் கற்று தந்தவரை, தினமும் வணங்குகிறேன்.- மா.தச.பூர்ணாச்சாரி, மதுரை.தொடர்புக்கு: 94432 66674