உள்ளூர் செய்திகள்

உளுந்து பால்!

தேவையான பொருட்கள்:உளுந்து - 100 கிராம்பனங்கற்கண்டு - 50 கிராம்பால் - 500 மி.லி.,ஏலக்காய் - 2உப்பு - தேவையான அளவுசெய்முறை:முதலில், உளுந்தை, அரைமணி நேரம் ஊற வைத்து, நன்கு அரைத்துக் கொள்ளவும். பின், பாலை நன்கு காய வைத்து, அதனுடன் உளுந்து கலவையை கலந்து, உளுந்து வாசம் சற்று குறையும் வரை, கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு, ஏலக்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும். இது ஒரு சிறந்த காலை பானம்; சத்தானதும் கூட, குழந்தைகள் மட்டும் இன்றி, அனைவருக்கும் உகந்தது.- கோ.இசைமொழி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !