கிறிஸ்துமஸ் க்விஸ்
1.கிறிஸ்துமஸ் விசேஷ விருந்தில் இந்த பறவையின் பிரியாணி கட்டாயம் இடம் பெறும். இதன் பெயர் என்ன? 2. இங்கிலாந்தில் கிராமப் புறத் தோட்டங்களில் கிறிஸ்துமஸின் போது இந்த அழகிய மலர் ஏராளமாகப் பூத்துக்குலுங்கும். இம் மலருக்கு என்ன பெயர் என்று சொல்ல முடியுமா?3.இந்த மூன்று ஞானிகளும் வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி உலகை உய்விக்கப் பிறந்த ஏசுவைக் காண பெத்லஹமுக்குச் சென்றனர். இது என்ன நட்சத்திரம்? 4. கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங் களில் வீட்டின் நடுவே ஒரு மரத்தை வைத்து அலங்காரங்கள் செய்து மகிழ்வது வழக்கம். கிறிஸ்துமஸ் ட்ரீ பழக்கத்தைப் புகுத்தியவர் ஜெர்மனியைச் சேர்ந்த மதத் தலைவர். இவர் யார்?5. டச்சு தேசத்துக் குழந்தைகளுக்குப் பரிசுகளைக் கொண்டு வந்து தரும் கிறிஸ்துமஸ் தாத்தாவான சாண்டா க்ளாஸ் இவர். குதிரை மீது வருகிறார்... போப்பாண்டவர் போலிருக்கிறார் இல்லையா? இந்த டச்சு கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயர் என்ன?கிறிஸ்துமஸ் க்விஸ் விடைகள்:1.இப்பறவையின் பெயர் வான்கோழி. மேலை நாடுகளில் இதை டர்க்கி என்பர். இதன் தாயகம் மெக்ஸிகோ. ஆங்கிலேயர்களால் வான்கோழி இந்தியாவில் புகுந்து, வான்கோழி பிரியாணியும் புகழ்பெற்றது. ஆனால், மெக்ஸிகோவில் இது காட்டுப்பறவையாகி குறைந்து கொண்டே வருகிறது.2.இம்மலரை, 'கிறிஸ்துமஸ் ரோஜா' என்கின்றனர். சுண்ணாம்பு நிலத்தில்தான் இந்த கிறிஸ்துமஸ் ரோஜாக்கள் வளருகின்றன. ஆனாலும் இதை வேறு இனத்தோடு ஒட்டுச் சேர்த்து சிவப்பு, இளஞ்சிவப்பு நிறமுடைய மலர்கள் பூக்கும்படி செய்து தோட்டங் களில் அழகுக்காகப் பயிரிடுகின்றனர் அங்கே.3.ஞானிகளை பெத்லஹமுக்கு அழைத்துச் சென்ற பிரகாசமான நட்சத்திரம் ஹாலி காமெட் (தூமகேது வால் நட்சத்திரம்) தான் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த தூமகேது கி.மு.87லிருந்து கி.பி.1910 வரை இருபத்தியொறு தடவைகள் தோன்றியிருக் கின்றன. பைபிள் குறிப்புகளின்படி கி.மு.11ல் ஹாலி காமெட் தோன்றி இருப்பதற்கான ஆதாரம் உள்ளது.4.'கிறிஸ்துமஸ் ட்ரீ' என்னும் அலங்காரப் பழக் கத்தைப் புகுத்தியவர் ஜெர்மானிய மதகுரு மார்டின் லூதர். ஜெர்மனியிலுள்ள எர்பர்ட் மடாலயத்தில் சன்னியாசியாக இருந்த போது அவ்வூர் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதிப் பொருள்களை மடாலயத்தின் தோட்டத்தில் வளரும் பிர் மரங்களில் கட்டித் தொங்க விடுவது வழக்கம். இவருடைய இந்தப் பழக்கம் ஜெர்மனி யிலுள்ள மற்ற நகரங்களுக்கும், குடும்பங்களுக் கும் பரவலாயிற்று. விக்டோரியா மகாராணியின் கணவர் ஆல்பர்ட் ஜெர்மன்காரர். ஆகவே, இங்கிலாந்துக் குழந்தைகளுக்கு மார்டின் லூதரின் கிறிஸ்துமஸ் ட்ரீ வழக்கத்தை சிங்காரித்த மரத்தில் பரிசுப் பொருள்களை கட்டித் தொங்க விடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.5.குதிரை மீது அமர்ந்திருப்பவர் சாண்டா கிளாஸ். குழந்தைகளுக்குப் பிடித்தமான மதகுரு இவர். டிசம்பர் மாதம் 6ம் தேதி இவர் குதிரை மீதேறி வருவார். ஒவ்வொரு குழந்தையும் தன் காலணியை வீட்டு வாசலிலோ, படுக்கைத் தலை மாட்டிலோ விட்டு வைப்பர். அதிலே அவர் களுக்குப் பரிசுப் பொருள் கொண்டு வந்து போடுவார் நிக்கோலஸ். தான் அளிக்கும் பரிசுக்குப் பதிலாகத் தன் குதிரைக்கு ஒரு காரட்டை மட்டும் எடுத்துப் போவார்.