உள்ளூர் செய்திகள்

குற்றாலீஸ்வரன்!

இந்திய நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் நவ., 8, 1981ல் ஈரோட்டில் பிறந்தார்; மாரத்தான் வகை நீச்சல் போட்டியில், 13ம் வயதில் பங்கேற்றார். ஐரோப்பிய நாடுகளான, இங்கிலாந்து, பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கில கால்வாயை, 1994ல் நீந்தி கடந்தார். இவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. தொடர்ந்து, இந்திய அரசின் மிக உயர்ந்த அர்ஜூனா விருது, 1996ல் வழங்கப்பட்டது. முதன்முதலில், ஏழு வயதில், நீச்சல் போட்டியில் பங்கேற்றார், குற்றாலீஸ்வரன். தொடர்ந்து, 10ம் வயதில், 5 கி.மீ., துார நீச்சல் போட்டியில் பங்கேற்று, நான்காம் இடம் பிடித்தார். இந்தியா - இலங்கை இடையே, பாக் நீரிணைப்பை, 1994ல் நீந்தி கடந்தார். பின், தமிழக அரசு உதவியுடன் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்தார். தொடர்ந்து, உலகம் முழுதும் பல நாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றார். ஆறுமுறை விருதுகள் வென்றுள்ளார். இளம் வயதிலே, அர்ஜூனா விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !