க்ரைம்! (2)
குற்றம் நடந்தது என்ன?உங்களுக்கு தெரியுமா? ஒரு குற்றம் நடந்த பின் அங்கே குற்றம் சம்பந்தமான ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் ஆராயும் விஞ்ஞானம்தான், போரன்சிக் சையின்ஸ்.இரண்டு பொருள்கள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும்போது அவை தங்களுக்குள் தங்களின் பற்றிய ஆதாரங்களையும் மாற்றி கொள்ளும், என்று 'எட்மண்ட் லோகார்ட்' எனும் விஞ்ஞானி கூறியுள்ளார். சிறிய மணல் துகள் கூட ஒரு பொருளிலிருந்து மற்ற பொருளிற்கு மாறி அது குற்றம் தொடர்பான ஆதாரமாய் அமைய உதவும். இது போன்ற மிக நுண்ணிய விஷயங்கள், ஒரு மைக்ரோஸ் கோப் மூலம்தான் ஆராயப்படும்.'டிவி', சினிமாவில் போலீஸ் துப்பறிவது என்பதை பார்க்கும்போது, அது எளிதான பணியை போல தோன்றும். துப்பறியும் நிபுணர், குற்றம் நடந்த இடத்திற்கு வருவார். முதலில் ரேகைகளை தேடுவார். பவுடர் போட்டு, பின்னர் வலுவான குற்ற ஆதாரத்தை கண்டுப்பிடிப்பார். அந்த ஆதாரம் குற்றவாளியை அடையாளம் காட்டும்.இது டிவி சினிமா அல்ல... அசல்!நிஜத்தில் இது போல விஷயம் அவ்வளவு எளிதல்ல... முதலில் குற்றம் நடந்த இடத்திலுள்ள ஆதாரங்கள் கலைக்கப்படாமல், அப்பகுதியில் பொதுமக்கள் நுழையா வண்ணம் தடுக்கப்பட, 'ஸீல்' வைக்கப்படும். எதுவும் தொடப்படக் கூடாது. அதன் பின் என்னதான் உண்மையில் நடந்தது என்பதை அறிய, ஆராயும் பணி மணிக்கணக்கில் நடக்கும். ஆதாரமாக கிடைக்கும் பொருள்கள் தனித்தனியே பைகளில், 'ஸீல்' வைத்து லேப்-பில் நிபுணர்களால் பல விதங்களில் ஆராயப்படும்.தேடிக்கிட்டே இருப்போம்!ஒரு குற்றத்தின் பரிமாணத்தை கணக்கிடுவது, சில சமயம் மிக கடினமான பணியாகிவிடும். குற்றம் நடந்த இடம் ஒரு அறையாகவோ முழு இட மாகவோ இருக்கலாம். ஒரு கொலை நிகழ்ந்தது என்றால் குற்றவாளி அங்கு இருந்ததற்கான தனது அடையாளங்களை பல அறைகளில் விட்டு சென்று இருப்பான். ஒருவர் கொலை செய்யப்பட்டு அந்த உடல் வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இருந்தால், குற்ற காட்சி என்பது பல இடங்களில் கிடைக்க பெறும். உடல் காரில் எடுத்த செல்லப்பட்டு இருந்தால், அந்த காரும் குற்ற காட்சியில் இடம்பெறும். முக்கியமான கொலைக்கான ஆதாரம், பெரும்பாலும் குற்றம் நடந்த இடத்தின் வெகு அருகேதான் இருக்கும். நிபுணரின் திறமை, குற்றம் நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது.எட்மண்ட் லோகார்ட்!எட்மண்ட் லோகார்ட் என்பவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் லயான் நகரில் வாழ்ந்தார். அவர் 1910-ம் ஆண்டு போரன்சிக் சயின்ஸில் நிபுணராக ஆனார். அவர் தான் காவல்துறையின் முதல் குற்றம் கண்டுப்பிடிக்கும் ஆய்வு கூடத்தை நிறுவினார். 1912 கைரேகைகள் தான் மிக முக்கியமான ஆதாரம் என்பதை கண்டுபிடித்தார். ஒவ்வொரு மனிதரும், தாம் செல்லும் இடத்தில் எல்லாம் தங்களின் இருப்பிற்கான அடையாளங்களை எப்படி யெல்லாம் விட்டு செல்கின்றனர் என்பதை இவரே தான் விளக்கினார்.விவரங்கள் அடுத்த வாரம்!