உள்ளூர் செய்திகள்

க்ரைம்! (3)

ஓவர் சீன் உடம்பிற்கு ஆகாது!1984-ஆம் ஆண்டு 'ஜீவானிட்டா கில்லட்' என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திடீரென இறந்துவிட்டார்.அவருடைய கணவன், ஜீவானிட்டா தான் எடுத்து கொள்ள வேண்டிய மருந்துகளை தவறாக எடுத்து கொண்டு விட்டார் என்று கூறினார். போலீஸ் கேள்விகளை கேட்டது. குற்றக்காட்சியை கூர்ந்து நோக்கியது. என்ன உணவு, எடுத்து கொண்டார் என்பதை கூறும் 'அடாப்சி' அறிக்கை அவர் தவறான மருந்து உட்கொண்டதால் இறக்கவில்லை என கூறிவிட்டது. வேறு ஏதோ காரணத்தால் அவர் இறந்து இருக்கிறார். அவர் கொல்லப்பட்டது எப்படி என்பதில் போலீஸ் இன்னமும் கண்டுபிடிக்கும் நிலையிலேயேதான் இருந்தனர். போலீஸ் ஜீவானிட்டாவின் மரணம் ஏற்பட்ட இடத்தை மறுபடியும் துப்பறிந்த போது, ஒரு பிளாஸ்டிக் லாண்டரி பை கிடைத்தது. அதை கூர்ந்து பார்த்தபோது அந்த பையில் ஒரு பெண்ணின் மூக்கு அடையாளம் இருப்பது தெரிந்தது. இறந்த பெண்ணின் முகத்தின் தடம் இன்னமும் அந்த பையில் இருந்தது. அவரை கொன்று இருந்தது தெரிந்தது. இந்த பையின் சாட்சி, அவரின் கணவன்தான் குற்றவாளி என்று நிரூபித்ததுகுற்றவாளியை கண்டுபிடிக்கஒரு குற்றக் காட்சியை துப்பறியும் நிபுணருக்கு வெவ்வேறு தடயங்களை அடையாளம் காண, பலவித அடிப்படை கருவி பொருட்கள் தேவை. இந்த பொருட்களில் மிக நைசான பவுடர், துகள்களை சேகரிக்கும் பிரஷ், டார்ச், டேப், கைரேகைகளை சேகரிக்க பிரத்யேக இங்க் பேட், பெரிதாக்கி காட்டும் லென்ஸ், என பலதும் நிபுணரிடம் இருக்கும். மிக முக்கியமான க்ளவுள்-துப்பறியும் நிபுணரின் கைரேகை தவறுதலாய் பதிந்து விட கூடாது என்பதற்காகதான். கால் ஸாக்ஸை கையில் மாட்டினாலும் ஆப்பு!1968 ஆம் ஆண்டு ஒரு திருடன் தன்னை மிக புத்திசாலியாக நினைத்து கொண்டான். தன் கைரேகைகள் பதியாமல் இருக்க கால் ஸாக்ஸை கைகளில் அணிந்து கொண்டான். ஆனால், அவனுக்கு தெரியவில்லை குதிக்கால் அடையாளங்களும் மிக முக்கியமானவை என்று. போலீஸ் அவனது வெற்று கால்அடையாளங்களை ஆதாரமாய் காட்டி கைது செய்தது.வாஷிங்டன், அமெரிக்கா 1994!ஒரு முறை விஞ்ஞானிகள் காதின் ரேகையை வைத்து கைது செய்தனர். ஆனால், இந்த ஆதாரம் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. காரணம், கைரேகை ஆதாரத்தை போல, காதின் ரேகை ஆதாரம் மிக உறுதியானதாய் கருதப்படவில்லை. போரன்சிக் நிபுணர்கள், வரும் காலத்தில் காதின் ரேகையும் உறுதியான ஆதாரமாய் ஏற்கப்படும் என கருதுகின்றனர். பிற்காலத்தில் காதின் ரேகையும் ஏற்கப் படலாம். அதனால் திருடர்கள், குற்றவாளிகள் காதுகளை கதவின் மீது வைத்தால் நிச்சயமாய் மாட்டுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !