வெள்ளரி பச்சடி!
தேவையான பொருட்கள்:வெள்ளரிகாய் - 1துருவிய தேங்காய் - 50 கிராம்பொரிகடலை - 50 கிராம்மிளகாய் வற்றல் - 2சீரகம் - 1 தேக்கரண்டிபெருங்காயம், உளுந்தம் பருப்பு, கடுகு, எண்ணெய், மஞ்சள்பொடி, உப்பு - தேவையான அளவு.செய்முறை:சுத்தம் செய்த வெள்ளரிகாயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்; துருவிய தேங்காய், பொரிகடலை, சீரகம், மிளகாய் வற்றல், மஞ்சள்பொடியுடன் உப்பு போட்டு நைசாக அரைக்கவும்.எண்ணெயில், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, துருவிய வெள்ளரி, அரைத்த மசாலாவைக் கலக்கவும். சுவைமிக்க, 'வெள்ளரி பச்சடி' தயார். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்; சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். உடல் கொழுப்பை கரைக்கும்; சுலபமாக 10 நிமிடத்தில் தயாரித்து விடலாம். - சத்யா பாபு, கோவை.தொடர்புக்கு: 73391 03567