குட்டீஸ் கார்னர்!
காங்கிரஸ் மாநாடு மும்பையில் நடைபெற்றது. அப்போது, வல்லபாய் படேல் பேசினார்.அப்போது 'இனிமேல் வெள்ளைக்காரர்களிடம் பேச்சு வார்த்தையே கிடையாது!' என்று கோபமாக கூறினார். மேடையில் இருந்த ஜே.பி.கிருபாளினி இதைக் கேட்டவுடன் இடையில் குறுக்கிட்டார். 'வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுக்களோடு கப்பலில் ஏற்றுவதற்கு எத்தனை கப்பல் தேவைப்படும் என்று அவர்களிடம் கேட்பதற்கு ஒரு முறையாவது பேசியாக வேண்டுமே,' என்று நகைக்சுவை உணர்வுடன் கூறினார்.இவருடைய பேச்சைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த சிரிப்பும், கரவொலியும் செய்தனர்.