உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜான் ஆல்வுட். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 40 தர்பூசணி பழங்களை தலையால் உடைத்து சாதனைப்படைத்தார். 2010-ல் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற 'சின்சிலா வாட்டர் மெலன்' விழாவில் இந்த சாதனையை படைத்தார்.மேரிகியூரி முதன் முறையாக இரண்டு நோபல் பரிசுகளை வென்று புகழ்பெற்ற ஒரு பெண்மணி. ஆனால், இவர் படிக்கும் காலத்தில், நாட்டிலுள்ள கிராக்கோ பல்கலைக்கழகம் இவருக்கு 'சீட்' கொடுக்க மறுத்துவிட்டது. இவர் ஒரு பெண் என்பதே காரணம். ஆனால், பின்னாளில் இவர் நோபல் பரிசைப் பெற்று சாதனைப்படைத்தார். பொதுவாக பண்ணைகளில் வளர்க்கப்படும் சேவல்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு காயங்களை ஏற்படுத்திக் கொள்ளும். இதனை தடுக்க, சீனாவை சேர்ந்த கோழிப் பண்ணையாளர்கள் புதிய முறையை கண்டுப்பிடித்துள்ளனர். அதாவது பிளாஸ்டிக் கண்ணாடிகளை சேவல் களுக்கு அணிவிக்கின்றனர். இதனால் அருகிலுள்ள சேவல் களை தெளிவாக பார்க்க முடிவதில்லை. எனவே, சேவல்கள் சண்டையிடாமல் அமைதியாக இருக்கிறது. வாட் ஆன் ஐடியா!உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்மணி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவர் துருக்கி நாட்டை சேர்ந்த 21 வயது பெண்மணி, 'ஹாட்டிஸ் கோகமன்.' இவரது உயரம் 72.5 செ.மீ. எடை வெறும் 7 கிலோதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !