உள்ளூர் செய்திகள்

வேடம்!

நாடகம் ஒன்றில் துறவியான பட்டினத்து அடிகள் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தான், புகழ் பெற்ற நடிகன். அதைக் கண்டு மிகவும் மகிழ்ந்து, சிறந்த நடிப்புக்கு பரிசு தர விரும்பினார் அந்த நாட்டு மன்னர். மேடையில் ஏறி, துறவி வேடத்தில் இருந்த நடிகனை அழைத்தார் மன்னர். அணிந்திருந்த விலை உயர்ந்த முத்து மாலையைப் பரிசாக தந்தார். வாங்க மறுத்து, 'சற்றே பொறுங்கள்... சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன்...' என, ஒப்பனை அறைக்குள் நுழைந்தான் நடிகன். வேடத்தைக் கலைத்து திரும்பியவன், 'அரசே... இப்போது பரிசை தாருங்கள்...' என்றான்.நடிகனின் செயல் மன்னருக்கு புரியவில்லை. 'நானே விரும்பி பரிசு தந்தபோது, வேண்டாம் என்றாய்... இப்போது, நீயே கேட்கிறாய்; இதற்கு என்ன காரணம்...' என்றார். 'என்ன வேடம் போட்டிருக்கிறேனோ... அதன்படி நடந்து கொள்ள வேண்டும். முற்றும் துறந்த முனிவர் வேடத்தில் பரிசு வாங்குவது பொருத்தமாக இருக்காது என்றே மறுத்தேன். வேடத்தை கலைத்த பின், பரிசைக் கேட்டேன்...' என்றான் நடிகன்.வியந்து பெரும் பரிசளித்தார் மன்னர்.குழந்தைகளே... சூழலுக்கு ஏற்ப அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !