உள்ளூர் செய்திகள்

அம்னெஸ்டி தெரியுமா?

சர்வதேச அளவில் உலகம் முழுவதும் அமைதியை விரும்புவோரின் அமைப்பே, 'அம்னெஸ்டி இண்டர்நேஷனல்' ஆகும். முக்கியமாக தனி மனித உரிமை, சுதந்திரம் மற்றும் உயிர் உடைமைகளின் நலனிற்குக் குரல் கொடுத்து நிலை நாட்ட உழைக்கும் அமைப்பான இந்த இயக்கம் கட்சிக்கோ வேறெந்த அரசுக்கோ சொந்தமானதல்ல.பொதுநல அமைதியில் (சர்வதேச அளவில்) நாட்டமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து லண்டனை மையமாகக் கொண்டு 1961ல் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான நிரபராதிகள், அப்பாவிகள், கொடுமைகளிலிருந்து இவ்வமைப்பு மூலம் விடுதலை பெற்றுள்ளனர். 'அம்னெஸ்டி இண்டர்நேஷனல்' அமைதிக்கான நோபல் பரிசை 1977ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !