பூமி அதிர்ச்சி பலவிதம்!
இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டு ரிக்டெர் ஸ்கேலின்படி 6.3 அளவு ஆகும்.மனித வரலாற்றில் கி.பி.ஏழாம் நூற்றாண்டில், சீனாவின் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம்தான் முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது. கடந்த எழுபது ஆண்டுகளில் ஆண்டுதோறும் 16 முதல் 18 பெரிய பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. 1905, 1920, 1938, 1939-ஆம் ஆண்டுகளில் ரிக்கெடர்ஸ்கேலின் படி 8.0 அளவுள்ள பூகம்பங்கள் மூன்று நிகழ்ந்துள்ளன. 1906-இல் 6 பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன. அவ்வாண்டு மொராக்கோ நாட்டு அகாதீர் பூகம்பத்தில் 12 ஆயிரம் பேர் காயமடைந்தனர். அகாதீரின் ஜனத்தொகையே 36 ஆயிரம் பேர்தான். 24-1556-இல் சீனாவின் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் இறந்தனர்.அடிக்கடி பூகம்பத்தால் அழிவுறும் நாடு என்ற பெயரை கலிபோர்னியா பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை அழிவு ஏற்படுத்தும் பூகம்பம் அங்கு நிகழும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அங்குள்ள நாளிதழ்கள் பூகம்பத்தின்போது என்னென்ன முன்னெச்சரிக்கைகள் செய்து கொள் வேண்டும் என அடிக்கடி மக்களை எச்சரிக்கும்!