தெரிஞ்சுக்கோங்க!
சொட்டும் தேன்!இலக்கிய மன்ற விழா ஒன்றில் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமை தாங்கி பேசினார். அப்போது, தேன் தமிழ் மொழி பற்றி இனிமையாக கூறியது...'தமிழ்மொழி தேனைப் போன்ற இனிய நற்சுவை உடையது. பேசினாலும், கேட்டாலும், தேன் சொட்டும். படித்தேன், உட்கார்ந்தேன், பார்த்தேன், எடுத்தேன், சிரித்தேன் என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறது இல்லையா...'இந்த பேச்சை, தேன் குடித்த வண்டாக ரசித்தனர் மக்கள்.துப்பாக்கி கண்ணீர்!ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானி, மிகாயல் கலாஷ் நிகோவ். இவர், 'ஏகே -47' ரக துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். இப்போது, 'ஏன் அதை உருவாக்கினேன்...' என கண்கலங்கி அழுகிறார்.அதை கொடூரமாக பயன்படுத்தும் விதத்தை பார்த்து, 'இவ்வளவு கேவலமாக பயன்படுத்துவர் என, சிந்திக்கவில்லையே...' என, கண்ணீருடன் கூறுகிறார்.