முதல் மரியாதை!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், செயின்ட் அலோஷியஸ் பள்ளியில், 2001ல், 4ம் வகுப்பு படித்த போது, வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று வந்தேன். அதிக குறும்புகள் செய்ததால், சேட்டைகளை கண்காணித்து கண்டிப்பார் வகுப்பு ஆசிரியை ஸ்டெல்லா.ஒரு நாள், வகுப்புகள் முடிந்து, மாலை தோழியருடன் விளையாடி கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு ஆசிரியைக்கு, மாலை வணக்கம் தெரிவிக்க மறந்து விட்டேன்.அதை கவனித்திருந்த வகுப்பாசிரியை, மறுநாள் காலை முதல் வேலையாக விசாரித்தார். அந்த ஆசிரியை என் அம்மா தான் என்று தெரிந்தும் மன்னிப்பு கேட்க வைத்தார். அது படிப்பினை தந்தது.தற்போது, என் வயது, 30; பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். எந்த நிலையிலும் ஆசிரியருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என உணர்த்தியவரை மனதில் கொண்டுள்ளேன்.- ஜோ.ஏஞ்சல், திருப்பூர்