பெண்களின் நட்பு!
இலங்கை தலைநகர் கொழும்பு, விபுலானந்தர் தமிழ் மகா வித்யாலயாவில், 1998ல், 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது நடந்த சம்பவம்...தமிழாசிரியை சாந்தி மிகவும் சாந்தமானவர். பாடம் நடத்தும் போது கண்டிப்புடன் இருப்பார். அன்று, வகுப்பு தோழி இந்திராணியுடன், தோழி ஜெயந்தி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். அவள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினோம். வழியில், வகுப்பு தோழர்கள் சிவக்குமார், விஜய், பாபு ஆகியோர் எங்களைக் கண்டனர். அவர்கள் என்னிடம் பேசியதே இல்லை. எங்களை அழைத்து விசாரித்தனர். தோழியின் வீடு வரை வந்து வழி காட்டி, 'இனிமே, தெரியாத இடத்துக்கு தனியாக வராதீங்க... பொழுது சாய்வதற்குள் திரும்பிடுங்க...' என அறிவுரைத்து சென்றனர். மறுநாள் வகுப்பறையில், எதுவும் நடக்காத மாதிரி இருந்தனர். எதையும் கேட்கவும் இல்லை. மதிக்கும் வகையில் அவர்கள் நடத்தை இருந்தது. இந்தியாவுக்கு, 1999ல் வந்தேன். பின், எந்த தொடர்பும் இல்லை. ஆண்களின் நட்பு வட்டம் இறுதி வரை; பெண்களின் நட்பு வட்டம் பாதி வரை... என, ஒரு சொலவடை உண்டு. அதன் பொருளை இப்போது உணர்கிறேன்.என் வயது, 37; வகுப்பு தோழர்கள் செய்த உதவி, இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் என் மனதில் இருக்கிறது. இந்த கடிதத்தை அவர்கள் படிக்க நேர்ந்தால், மிக்க மகிழ்ச்சியடைவேன். - அன்னலட்சுமி, விருதுநகர்.தொடர்புக்கு: 94431 63916