உள்ளூர் செய்திகள்

நெய் அப்பம்!

தேவையான பொருட்கள்:வாழைப்பழம் - 2அரிசி மாவு - 1 கப்வெல்லம் - 100 கிராம்சோடா உப்பு - சிறிதளவுதேங்காய், நெய், ஏலப்பொடி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வாழைப்பழத்தை, நன்கு அரைத்துக் கொள்ளவும். பின், வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி பாகாக்கிக் கொள்ளவும்.அரைத்த வாழைப்பழம், வெல்லப்பாகு, அரிசி மாவு, சிறு துண்டுகளாக்கிய தேங்காய், சோடா உப்பு, ஏலப்பொடியை, நன்கு கலந்து இட்லி மாவு பதமாக்கவும். இந்த மாவை, குழி பணியார சட்டியில் ஊற்றி, அப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவைமிக்க, 'நெய் அப்பம்' தயார். வித்தியாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்பி உண்பர்.- சி.சிந்துஜா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !