நெல்லிக்காய் பொடி!
தேவையான பொருட்கள்:நெல்லிக்காய் - 12இஞ்சி - 1 துண்டுபச்சை மிளகாய் - 2உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.செய்முறை:நெல்லிக்காய்களை விதை நீக்கி, உப்பு, பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். இதை தட்டைகளாக்கி, வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்ததும், உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடியாக்கவும். சத்து மிக்க, 'நெல்லிக்காய் பொடி' தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.- பி.பாரதி, திருச்சி.தொடர்புக்கு: 90432 82401