பச்சை பயிறு கட்லட்!
தேவையானப் பொருட்கள்:முளைக் கட்டிய பச்சை பயிறு - 100 கிராம்வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 2கடலை மாவு - 4 தேக்கரண்டிஇஞ்சி - சிறு துண்டுகறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதுஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்பசெய்முறை:முளை கட்டிய பச்சை பயிறை, நன்றாக வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். அதில், பொடியாக வெட்டிய, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, உப்பு, கடலை மாவு அனைத்தையும் போட்டு, நன்கு பிசைந்து வடை போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு எடுத்தால், மொறு மொறுப்பான, சூப்பரான கட்லட் தயார்; சத்துமிகுந்ததும் கூட.- ஜெ.செல்வி, சென்னை.