ஹேத்ரியன் பெருஞ்சுவர்!
உலக அதிசயங்களில் ஒன்று ஆசிய நாடான சீனாவில் உள்ள பெருஞ்சுவர். இதுபோல் மற்றொரு பெருஞ்சுவர் கி.பி.122ல், கட்டப்பட்டது. ஐரோப்பாவில் ரோமானிய பேரரசை ஆண்ட ேஹத்ரியன் என்பவரால் பிரிட்டனில் கட்டப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன், ரோமானிய ஆட்சியின் கீழ் இருந்தது. திடீரென அண்டை நாடான ஸ்காட்லாந்து ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியது; இதில் ரோமானிய படைகள் சிதறி ஓடின.மிகுந்த ஆத்திரம் அடைந்தார் மன்னர். இது போன்ற தாக்குதலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அரணாக, பெருஞ்சுவர் அமைக்க முடிவு செய்தார்.அது மிகவும் சவாலான பணி. காரணம், இரண்டு நாடுகளின் எல்லை, 122 கி.மீ., நீளமாக இருந்தது. மனம் தளராமல் திட்டமிட்டார். மக்களை திரட்டி, சுவர் எழுப்பும் பணியை முடுக்கிவிட்டார்.பலமான அடித்தளத்துடன், நெடுஞ்சுவர் கம்பீரமாக எழுந்தது. இதை, ஆயிரக்கணக்கான வீரர்கள் காவல் காத்தனர். நெடுஞ்சுவரின் ஒரு பகுதியில், 1620 சதுர மீட்டர் பரப்பளவுள்ள, ஒரு கோட்டையும் கட்டப்பட்டது. பெருஞ்சுவரை, எழுப்பிய மன்னர் ஹேத்ரியன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.குழந்தைகளே... கடினப்பணி என்று எதுவும் இல்லை. திட்டமிட்டு முயன்றால் எதையும் சாதிக்கலாம். அதற்கு முன் மாதிரியாக உள்ளார் மன்னர் ஹேத்ரியன்.