உள்ளூர் செய்திகள்

இப்படித்தான் தூங்கினார்!

எங்கள் ஊர் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது. எங்கள் வகுப்பு ஆசிரியர் மதிய உணவு உண்டபின், இரண்டு மணிக்கு வகுப்பிற்கு வந்தவுடன் சிறிது நேரம் தூங்கி விடுவது வழக்கம். அன்றும் ஆசிரியர் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று கல்வி அதிகாரி ஒருவர் வந்து விட்டார். அவர் மிகவும் கண்டிப்பானவர்; ஐந்து நிமிடங்கள் ஆசிரியரின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார் கல்வி அதிகாரி.ஆசிரியருக்கு திடீரென்று விழிப்பு ஏற்பட்டு கண்ணை திறந்ததும், கல்வி அதிகாரியை பார்த்து பயந்து போனார். உடனே எங்களைப் பார்த்து, 'மாணவர்களே சித்தார்த்தர் இப்படி கண்ணை மூடி தவம் இருந்துதான் உண்மையை அறிந்து புத்தர் ஆனார்' என்றாரே பார்க்கலாம்.கல்வி அதிகாரியும் வாய் விட்டு சிரித்துவிட்டு, ஆசிரியரின் முதுகில் தட்டி விட்டுச் சென்றார். எங்களது ஆசிரியரின் நடிப்பை கண்டு வாய்விட்டு சிரித்தோம்.- எஸ்.கிருஷ்ணராஜ், நீலகிரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !