இதோ வந்துட்டேன்.... இமோஜீஸ்!
ஹாய்... ஜில்லூஸ்... பட்டூஸ்.... நாங்கதான் உங்களோட, 'லவ்வபில் இமோஜீஸ்' பேசுறோம்... நீங்க எல்லாருமே எப்பவும், 'ஹாப்பி'யா இருக்கணும். இந்த சம்மர்ல அடிச்சி கொளுத்துற வெயில சமாளிக்கணும்னா என்னென்ன 'சம்மர் கலெக் ஷன்ஸ்' மார்க்கெட்ல வந்துருக்குன்னு சொல்லப் போறோம். முதல்ல கேர்ள்ஸ்...இந்த பலாசோ பேன்ட்ஸ்தான் இப்போதைய பேஷன். ரொம்ப, 'ப்ரீ'யா இருக்கும். அதேசமயம் உடம்பு பூரா மூடியிருப்பதால் சூரிய ஒளியிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும். லூசா வெயிட்லெஸ் ஆ இருப்பதால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். போட்டு அசத்துங்க... டைட் லெகின்ஸ்க்கு சொல்லுங்க ஒரு பை! பை!இந்த, 'லாங்மிடி' கூட உங்களுக்கு ப்ரியா இருக்கும். சம்மர்ல வரும் குட்டி பங்ஷன்ஸ்க்கு இந்த ட்ரஸ் போட்டுக்கோங்க. மேலே வரும், 'டாப் வித் ப்ளவர் ப்ரூச்' பார்ப்பதற்கு ஒரு, 'கிராண்ட் லுக்' கொடுக்கும் ஜில்லூஸ்...சில குட்டீஸ், 'ஷார்ட் ஸ்கெர்ட்ஸ்'சை விரும்புவீங்க... அழகு அழகு பெல்ட்டுடன் வரும் இந்த ஸ்கர்ட்ஸ் போட்டுகிட்டு பூட் அல்லது ஷுஸ் போட்டுகிட்டு, 'ஜிங்கு ஜிங்கு'ன்னு நடங்க... சரியா?பாய்ஸ்... என்ன மொறைக்கிறீங்க... பொறுமை... பொறுமை... உங்கள விட்டுடுவேனா? இந்த மாதிரி ஸ்லீவ்லெஸ் பனியன்ல டாக்கிங் டாம், ஸ்பைடர் மேன், சூப்பர்மேன் மாதிரி படம் போட்ட பனியன் மற்றும் விதவிதமான மாடலில் வந்திருக்கும் ஸாண்டல்ஸ் போட்டுக்கிட்டு ஸ்டைலா நடந்தீங்கன்னா அவ்ளோதான்... அப்பப்பா... என வாயை பிளப்பர். வெயில் உங்களை தாக்காமல் இருக்க கிட்டி கேப்ஸ், ராபிட், ப்ளவர் டிஸைன், டெட்டி கேப்ஸ் போட்டுகிட்டு போங்க...அப்புறமா 'ஸன் க்ளாஸ்சஸ்' விதவிதமான டிசைனில் வந்திருக்கு... அதையும்போட்டுகிட்டா, உங்க கண்களை பாதுகாத்த மாதிரியும் இருக்கும், அப்படியே ஒரு, 'ஸ்டைல் லுக்' கிடைத்த மாதிரியும் இருக்கும்.குட்டீஸ்... உங்களுக்கென புதுப்புது பெர்பியூம்ஸ் மார்க்கெட்ல அறிமுகமாகியிருக்கு. டக்கி, பட்டர் பிளை, டெட்டி, ஸ்டிராபெர்ரி என்ற பெயரில் மனம் வீசும் பெர்பியூம்ஸ்சை போட்டு 'நைஸ் ஸ்மெல்லுடன் போனீங்கன்னா... சே... சே... சான்ஸே இல்ல... சும்மா கலக்குங்கப்பா!ஒன்மினிட்!இதெல்லாம் கேட்டு உங்க பெற்றோரை தொல்ல பண்ணாதீங்க... உங்களோட, 'பிக்கி பேங்'க அதான் உண்டியல ஒடச்சி கொடுத்து வாங்கித்தரச் சொல்லுங்க... நான் எஸ்கேப்... உங்க பேரண்ட்ஸ் என்ன திட்டினா, அப்புறம் நான் 'க்ரை க்ரை இமோஜி' ஆகிடுவேனாக்கும்.ஹ... ஹா... இமோஜி!