உள்ளூர் செய்திகள்

கூட்டுறவின் மாண்பு!

சிவகங்கை மாவட்டம், கோட்டையூர், சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2009ல், 8ம் வகுப்பு படித்தபோது, தோழியர் ஏழு பேர் இணை பிரியாமல் இருந்தோம்; அனைவருக்கும் கற்பதில் ஆர்வமிருந்தது.காலாண்டுத் தேர்வில், கணக்கு பாடத்தில் ஒரு தோழி, குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாள். அடுத்து வரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் வகையில் உதவினோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தேகம் தீர கற்றுக் கொடுத்தோம்.அடுத்து வந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால், கணக்கு ஆசிரியை வள்ளியம்மை பாராட்டினார்; அதிக மதிப்பெண் பெற எடுத்திருந்த முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார். ஆர்வமுடன் எங்களை அழைத்து, 'இது போல் நலிவுற்ற மாணவியரை தத்தெடுத்து கற்றுக் கொடுங்கள்...' என, உற்சாகப்படுத்தினார். மகிழ்ச்சியுடன் நிறைவேற்றினோம்.இப்போது, என் வயது, 23; கல்வியியலில் முதுகலை இறுதியாண்டு படிக்கிறேன். அந்த ஆசிரியை அறிவுரைத்தபடி இன்றும், நான் வசிக்கும் பகுதியில், படிப்பில் பின்தங்கிய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன்.- பா.பவித்ரா, சிவகங்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !