வெற்றி தரும் நம்பிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், படாளம், எம்.சி.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில், 2000ல், 11ம் வகுப்பு தொழிற்பாடபிரிவு, வகுப்பு ஆசிரியர் வாட்சீஸ்வரன் மிகவும் அமைதியானவர். சிறப்பாக பாடம் நடத்திய அவர், 'காலாண்டு தேர்வில், முதல் மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு வழங்குவேன்...' என்று அறிவித்தார். பரிசை வெல்லும் எண்ணம் மனதில் பதிந்தது. தினமும் இரவு, பகல் என்று விடாமல் படித்து தயாரானேன். காலாண்டு தேர்வு முடிந்தது. முதன்மை மதிப்பெண் பெற்றவரை அறிய ஆவலுடன் காத்திருந்தோம். என் பெயரை அறிவித்து, 'தன்னம்பிக்கை தரும் வெற்றி' என்ற புத்தகத்தை பரிசளித்து பாராட்டினார். அதை, பாதுகாப்பாக வைத்துள்ளேன். இப்போது, என் வயது, 37; புதிய பணிகளை துவங்கும் போதெல்லாம், அந்த ஆசிரியர் ஊட்டிய உற்சாகத்தை நினைவில் கொள்கிறேன்.- வி.ரஞ்சன், காஞ்சிபுரம்.தொடர்புக்கு: 90959 85698