எப்படி மழை உருவாகிறது?
ஒரு மேகத்திற்குள், சுழற்காற்றுகள் தண்ணீர்த் துளிகளை சுற்றச் செய்கின்றன. தண்ணீர்த் துளிகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது, அவை ஒன்றாகச் சேர்கின்றன. இறுதியாக, அந்த நீர்த்துளிகள் கனமானவையாக மாறி கீழே விழத் தொடங்கு கின்றன. அவை விழும்போது, மேலும் அதிகமான ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு அவை இன்னும் பெரிய துளிகளாக மாறுகின்றன. சிறிய நீர்த்துளிகள் ஏறக்குறைய வட்டமாக, உருண்டை வடிவத்தில் இருக்கும். பெரிய நீர்த்துளிகளின் கீழ்ப்பகுதி தட்டையாக இருக்கும்.அப்புறம் என்ன சொட்டுச் சொட்டாக ஆரம்பித்து படபடவென மழை சொட்ட ஆரம்பித்து விடுகிறது. குட்டீஸ் கும்மாளம் போட வேண்டியதுதான் பாக்கி.