உள்ளூர் செய்திகள்

நான் ஒரு முட்டாள்!

நான், 8ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்... என் வகுப்பில், 35 மாணவியர் படித்தனர். அதில், 10 பேர், அனைத்து பாடங்களிலும், பாஸ் மார்க் வாங்குவர்; ஆறு பேர் நல்ல மதிப்பெண் பெற்று, ரேங்க் எடுப்பர். அனைத்து பாடங்களிலும், 'ரேங்க்' எடுக்கும் மாணவியருக்கு, காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், மதிப்பெண் பட்டியலைக் கொடுத்து, கவுரவித்து பாராட்டுவர். இது, அனைத்து வகுப்புகளுக்கும் பொதுவானது. எங்கள் வகுப்பு ஆசிரியை, மாணவியரை, 'ரேங்க்' எடுக்க வைக்க கையாண்ட முறை, மிகவும் சுவாரஸ்யமானது. தேர்வில், குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவியர் முதுகில், ஒரு பேப்பரில், 'நான் ஒரு முட்டாள்' என்று, எழுதி ஒட்டி, அனைத்து வகுப்புகளிலும் காட்டிவர அனுப்பிவிடுவார். இந்த தண்டனைக்கு பயந்து, படிப்பில் கவனம் செலுத்த துவங்கினர் மாணவியர். 'ரேங்க்' பட்டியலில் என் வகுப்பு மாணவியரின் எண்ணிக்கை அதிகமானது. பெற்றோர், தலைமையாசிரியரின் பாராட்டுக்கள் வகுப்பு ஆசிரியைக்கு கிடைத்தது. இப்போது என் வயது, 60. அந்த தண்டனையால் நாங்கள் அனைவரும் நன்றாக படித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.- எஸ்.பிரேமா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !