படிக்கத் தெரியாது மனப்பாடம் பண்ணிட்டேன்!
அது எட்டாம் நூற்றாண்டின் பின்பாதி காலம். இப்போது டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் என அழைப்படும் நாடுகளில் இருந்து புதிய நிலப் பகுதிகளை தேடி கடற்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் 'வைகிங்ஸ்' என அழைக்கப் பட்டனர். வைகிங்ஸ் மிக வேகமாக செல்ல கூடிய நீண்ட கப்பல்களை வைத்திருந் தனர். ஐரோப்பாவிலேயே வைகிங்ஸ் மக்கள் தான் மிகச் சிறந்த கடற்பயணிகளாக விளங்கினர்.அந்த கப்பல் எந்த நிலைமையையும் சமாளிக்க கூடியதாக இருந்தது. ஆனால், வைகிங்ஸ் பெரும்பாலும் கடல் கொள்ளையர்கள் போலவே நடந்து கொண்டனர். பின்னர், மெதுமெதுவாக தாங்கள் தாக்கி அடைந்த நிலப்பகுதியில் குடியமர தொடங்கினர். ஆயினும் அவர்கள் சிறந்த கடல் வணிகர்களாக திகழ்வது தொடர்ந்தது. பல வைகிங்ஸ்கள் கிறிஸ்துவர்களானார்கள். அயர்லாந்தின் டுப்ளின் நகரம் மற்றும் யுக்ரேனிய கெய்வ் நகரம் ஆகியவைகளை கண்டு பிடித்தவர்கள் வைகிங்ஸ்தான். வடக்கு பிரான்ஸில் குடியேறிய வைகிங் மக்கள் நார்மனிலிருந்து வந்தவர்களாவர்.வைகிங்ஸ் போன இடங்கள்!: யநூகிங்ஸ் மிக ஏராளமாக சுற்றினர். வணிகர் கள் ரஷ்யா, பெர்சியா மற்றும் மத்திய தரைக்கடல் என்று சுற்றினர். அவர்கள் வடகத்திய பொருள்களான கம்பளி மற்றும் தந்தங்களை தந்து, தெற்கத்திய பொருள்களான பட்டு மற்றும் வெள்ளியை பெற்றனர். புதிய நிலப்பகுதிகளை தேடி பயணித்தவர்கள் ஐரோப்பா, ஐஸ்லாந்து, க்ரீன்லாந்து மற்றும் அவர்கள் பார்த்த வடக்கு அமெரிக்காவின் புதிய நிலப்பகுதிக்கு போயினர். அந்த புதிய நிலப்பகுதியை 'வின்லான்ட்' என்றழைத்தனர்.வினோதமான கற்கள்: வரிவடிவ செதுக்கல்கள் கொண்ட பாறைகளை, கற்களை வைகிங்ஸ்கள் அமைத்தனர். பாடல், கவிதை மற்றும் விதவிதமான அழகான வரிவடிவங்களை கற்களில் அமைத்தனர்.அற்புதமான கதைகள்: கதை சொல்வது வெகு பிரபலமாய் இருந்தது. இந்த கதைகள் அல்லது இதிகாசங்கள் நீண்ட பாடல்களாய் இருந்தது. அவைகள், வீர தீர செயல்கள், அறியாத பகுதிகளுக்கான பயணம் மற்றும் போர் வெற்றிகளை பற்றி சொன்னது. அப்போது மக்கள் எழுதவோ, படிக்கவோ முடியாததால், கதைகளை முழுவதுமாக மனப்பாடம் செய்து ஞாபகத்தில் வைத்திருந்தனர்.