கழுத்துக் கழலை!
சிலருக்கு அயோடின் உப்பு பற்றாக் குறையால் கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி வீங்கி விடும். இதுவே, 'கழுத்துக் கழலை' எனப்படுகிறது. இதற்கான அயோடின் கடல்வாழ் பாசிகளிலிருந்து கிடைக்கிறது. இதற்காகத்தான் அயோடின் சேர்த்த உப்பைப் பயன்படுத்த வேண்டுமென்று அரசு பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.