இளஸ்... மனஸ்... (118)
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிக் கொண்டது. ஒரே மகன் என்பதால், ரொம்ப செல்லம் ஆன்டி; என்ன கேட்டாலும் கிடைக்கும்; நன்கு படிப்பேன். எல்லாருடைய பிரச்னைக்கும் நீங்கள் பதில் சொல்லும் விதம், எனக்கு ரொம்ப பிடிக்கும். என் பெற்றோர், குறட்டை விடுவது எனக்கு ரொம்ப பிரச்னையா இருக்கு ஆன்டி.இரண்டு பேருக்கும் நடுவுல தான், தூங்குவேன். இருவருமே பயங்கரமா கொறட்டை விடுவாங்க... எங்கப்பா, 'கொர்ர்ர்ர்...'ன்னு கொறட்டை விட்டு முடிக்கவும், மம்மி... 'பிர்ர்ர்ர்ர்...'ன்னு விடுவாங்க. இப்படி, இருவரும் மாத்தி மாத்தி விடுறதால, எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது... இன்னொரு அறை உண்டு; 'நான் தனியே படுத்துக்கிறேன்...' என்றாலும் விட மாட்றாங்க ஆன்டி...'எங்க கூடத் தான் துாங்கணும்; 'டீன் - ஏஜ்'ல் தனியறையில் படுக்க விடுவது தப்பு; மொபைல் போன் யூஸ் பண்ண தோணும். இது, பல தவறுகளுக்கு வழி வகுக்கும்...'ன்னு சொல்றாங்க. இந்த கொறட்டய நிறுத்த, வழி சொல்லி, என் துாக்கத்த காப்பாத்துங்க ஆன்டி ப்ளீஸ்...ஹா...ஹா...இந்த கொறட்ட பிரச்னை உலகம் முழுசும் இருக்குப்பா... இதனால பிரிந்து போன தம்பதியர் எத்தனையோ பேர்... குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்கன்னு இப்ப தான் தெரியுது.மொதல்ல கொறட்டை ஏன் வருதுன்னு தெரிஞ்சிக்கோ...மூக்கின் மூலம் விட வேண்டிய மூச்சுக்காற்று, வாய் வழியாக செல்லும் போது, அங்கே தடை ஏற்படுவதால் வரும் சத்தம் தான் கொறட்டை. இது, ஒரு வகை சுவாசப் பிரச்னை.கொறட்டையாளர்களுக்கு, மறுநாள் அதிக சோர்வு ஏற்படும்; அன்றாட வேலைகள் பாதிக்கப்படும்; மன உளைச்சல், இதய பாதிப்பு ஏற்படும். கழுத்து பெரிதாக இருப்பவர், குண்டாக இருப்பவர், பேச்சாளர்கள், டீச்சர்கள் வயதானவர்கள், மது அருந்துபவர், சிகெரெட் குடிப்பவர், சளித் தொல்லை உள்ளவர்களுக்கும் கொறட்டை வரும்; உணவு குழாய் பெரிசானாலும் கொறட்டை வரும். இந்த பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டியவை...* படுப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், சூடான பாலில், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடிப்பது நல்லது. இரண்டு வெங்காயம், இரண்டு பூண்டை நசுக்கி, அத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், நாளடைவில் குறட்டை நீங்கும். ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்னு சாப்பிட்டு வர, கொறட்டை நீங்கும்.* ஆவி பிடிப்பது நல்லது; இதனால், தொண்டையில் உள்ள அடைப்புகள் நீங்குவதால், கொறட்டை நின்று விடும்.* கற்பூர வள்ளி தைலத்துடன், சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து கொறட்டை விடுபவரது மூக்கின் அருகில் வைத்து வர, நாளடைவில் கொறட்டை நின்று போகும்.மகனே... இந்த வழி முறைகளை, உன் பெற்றோருக்கு சொல்லிக் கொடு...'கொர்....கொர்...' சத்தம் அடங்கி விடும்.நீ நிம்மதியாக தூங்கலாம்....ரொம்ப நேரம் தூங்கிடாதே... காலையில் எழுந்து, நல்லா படிக்கணும். சரியா...ஆல் த பெஸ்ட்! கொர்....கொர்...! (அச்சச்சோ... ஏலக்காய எடுங்க!) - ஜெனிபர்பிரேம்.