இளஸ்... மனஸ். (49)
அன்புள்ள பிளாரன்ஸ்...நான், 10 வயது சிறுவனின் தாய். மகன், மெட்ரிக்குலேஷன் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறான். ஒல்லியாய், உயரமாய் இருப்பான். கோரை முடி தலைகேசம்; குறும்பு கொப்பளிக்கும் கண்கள்; சதா பேச துடிக்கும் வாய். படிப்பில் மகா கெட்டிக்காரன். மாலை வந்தால் சகாக்களுடன் தெருவில் கிரிக்கெட் ஆடுவான். அவனது ஒரே பிரச்னை வாய்தான். தாத்தா, பாட்டியோ... அம்மா, அப்பாவோ... உறவினர், நண்பர்களோ... யாருடன் பேசினாலும் அமில வார்த்தைகளை கொட்டிக் கிழித்து விடுவான். எதிராளியின் மனதை புண்படுத்தியபின், 'எப்படி, 'கவுன்ட்டர்' கொடுத்தேன் பாத்தியா... செமயா கலாய்ச்சிட்டேன்... இனி, பார்ட்டி என்கிட்ட வம்புக்கு வராது!' என, தற்புகழ்ச்சி கொள்வான்.எதிராளியை வசைபாடிய பின், ஒரு வகையாக சிரிப்பான் பாருங்க... அதை என்னால் தாங்கிக் கொள்ளேவ முடியவில்லை. எவ்வளவு சொல்லியும் திருந்த மறுக்கிறான். அவனை திருத்த வழிமுறை இருந்தால் சொல்லுங்க தாயே.மகன் கலாய்ப்பில் தவியாய் தவிக்கும் அம்மா...அதிகமாக தமிழ் சினிமா நகைச்சுவை காட்சிகளை பார்க்கும் பழக்கம் உங்கள் மகனுக்கு உள்ளதாக எண்ணுகிறேன். நடிகர் கவுண்டமணி முதல், சதீஷ் வரை, 'கலாய்ப்பது' என்ற பெயரால், பிறரை மிக மோசமான வார்த்தைகளாலும், வசைகளாலும் இழிவுபடுத்துவதே, நகைச்சுவை என்ற பெயரில், தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. 'கலாய்த்தல்' என்ற சொல், 20 வருடங்களுக்கு முன், தமிழ் மொழியில் இல்லை. அந்த சொல்லுக்கு, எகனைக்கு மொகனை பேசுதல், ஏட்டிக்கு போட்டியாக பேசுதல் என, பொருள் கொள்ளலாம். கலாய்ப்பதற்கு, வாய் துடுக்கும், சமேயாசிதமும், பின்விளைவு பற்றி கவலைப்படாத மனமும் தேவை.மகனை திருத்த செய்ய வேண்டியது என்ன தெரியுமா...* தொலைகாட்சி பெட்டியில், தமிழ்சினிமா நகைச்சுவை காட்சிகளை பார்க்காமலிருக்க செய்யுங்க. கார்ட்டூன் சானலில், 'சின்சான்' தொடர் பார்க்கவிடாதீங்க. பதிலாக, 'நேஷனல் ஜியாகிரபிக்' சானல், பி.பி.சி., எர்த், டிஸ்கவரி போன்ற சேனல்களை பார்க்க பழக்குங்கள்* மகனை உட்கார வைத்து பேசி, நன்கு கலாய்த்து விடவும்; வாடிவதங்கி விடுவான். 'இப்படித்தான்டா! நீ கலாய்க்கும் போதும் பிறருக்கு இருக்கும் என உணர்த்தி, பெற்றவர்களுடன் எப்படி பேச வேண்டும், ஆசிரியர்களிடம், நண்பர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளச் சொல்லவும் * சபை நாகரிகம், இங்கிதம் அறியச் செய்யவும். பிறர் அவனை எப்படி நடத்த விரும்புகிறானோ, அப்படியே பிறரை நடத்த கற்றுக் கொடுக்கவும் * 'சினிமா வேறு... வாழ்க்கை வேறு... மகேன. தொடர்ந்து கலாய்த்தால் உறவும் நட்பும் உன்னை விட்டு விலகி தனி மரமாவாய். ஆகேவ கண்ணியமாக பேச பழகு!' என அறிவுரைக்கவும்* எந்த வார்த்தையையும், தொண்டை பெட்டியில் தணிக்கை செய்ய பழகு என பதவிசாய் சொல்லவும்* நீயோ, உன் கணவேரா யாரையும் மட்டம் தட்டி பேசும் பழக்கத்தை அறவே கைவிடுங்கள்* கலாய்க்கும் பழக்கமுள்ள மகனின் தோழர்களை கத்தரித்து விடு. மரியாதை ராமன் நண்பர்களுடன் மட்டும் பழக அனுமதிக்கவும்* வீட்டுப்பாடம் செய்து முடிக்கும் போது, மகனிடம் நீதிக்கதைகளை கூறவும். நீதிக்கதைகள், வாழ்க்கையை ஒழுங்குபடுத்த உதவும்* சிறுவர் கதை புத்தகங்களை படிக்கக் கொடுக்கவும். பிரபல நடிகர்கள், சார்லிசாப்ளின், லாரன் அண்ட் ஹார்டி, ஜெரிலுாயிஸ், மிஸ்டர் பீன்ஸ் போன்றோர் நடித்த நகைச்சுவை படங்களை அறிமுகப்படுத்தவும்.மிக விரைவில், 'கலாய்த்தல்' என்ற சொல், மகனின் மன அகராதியில் நிரந்தரமாக தொலையும். நம்பிக்கையுடன் செயல்பட வாழ்த்துகள்! -என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.