இளஸ் மனஸ்! (124)
அன்புமிக்க பிளாரன்ஸ் ஆன்டிக்கு...நான், 17 வயதான சிறுமி; பிளஸ் 2 படிக்கிறேன்; அம்மாவும், அம்மா வழி பாட்டியும் அறிவுரை மழை பொழிகின்றனர்.எனக்கு எப்போதுமே, அல்ட்ரா மாடர்ன் ஆடை அணிவதில் தான் விருப்பம் அதிகம். என் பாட்டியோ, 'நீ தமிழக பெண்; நம் கலாசாரப்படி புடவை, ரவிக்கை தான் உடுத்த வேண்டும்; டீனேஜ் பெண்கள் தாவணி அணிய வேண்டும்... தினமும் அணியவில்லை என்றாலும், வாரத்துக்கு ஒருமுறை வீட்டு விசேஷங்களில், பண்டிகை நாட்களில், புடவை அணி...' என வற்புறுத்துகிறார்.எனக்கு புடவை கட்டிக் கொள்ள தெரியாது; புடவையோ, தாவணியோ உடுத்த துளியும் விருப்பமில்லை; என்ன செய்யலாம் ஆன்டி.அன்பு மகளுக்கு...இன்றைய டீனேஜ் பெண்கள் கீழ்க்கண்ட ஆடைகளை தான் அணிகின்றனர்.* தொடையிலும், கால்களிலும், கிழிந்த ஜீன்ஸ் மற்றும் தொளதொளப்பான சர்ட்* சர்ட்டில் ஆபாசமான, சர்ச்சைக்குரிய வசனங்கள்* பிளேர்ட் வகை ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ்* மினி ஸ்கர்ட் மற்றும் க்ளோஸ் நெக் மேற்சட்டை* சுடிதார், சல்வார், கமீஸ், குர்தி மாடல், பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, அனார்கலி, ஷாட் டாப்ஸ்* லெக்கின்ஸ் மற்றும் மேற்சட்டை* லெஹெங்கா பாவாடை* பேகிஸ் டவுசர், ஸ்லீவ்லெஸ் பனியன்* போல்கா டாட், ஜம்ப் சூட்கன், ஷிம்மர் ஆடைகள்* உடலோடு ஒட்டிக் கொள்ளும் ஜீன்ஸ், பாய் பிரண்டு ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் ஜீன்ஸ், பூட் கட் ஜீன்ஸ், பிளார் ஜீன்ஸ், ஜெகிங்ஸ், லோஹிப் ஜீன்ஸ், ஹை வைஸ்ட் ஜீன்ஸ், கேப்ரி ஜீன்ஸ், கிழிசல் ஜீன்ஸ், ஒட்டு வேலை ஜீன்ஸ், சைனி ஜீன்ஸ், பக்கவாட்டு திறப்பு பட்டன் ஜீன்ஸ், க்ரோசெட் ஜீன்ஸ், ஓவர் ஆல் ஜீன்ஸ், ஜோஹர் ஜீன்ஸ்* ஆண்கள் அணியும் பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை.மேற்கூறிய ஆடைகளில், சுடிதார் முழுமையாக உடலை மறைக்கும். வாகனம் ஓட்ட பாதுகாப்பானது; ஆயிரம் வண்ணங்களுடன் கூடியது.தமிழக பெண்கள் விருப்ப ஆடையாக, சுடிதாரை தேர்ந்தெடுத்து நீண்ட நாட்கள் ஆகின்றன.உலகின் மிக சிறந்த காலை உணவு இட்லி என்பது போல, உலகின் மிகச்சிறந்த ஆடை புடவை தான். போன தலைமுறையில், பின் கொசுவம் வைத்து கட்டும், ஒன்பது கஜ புடவைகள் இருந்தன; இப்போது, 5.5 மீட்டர் புடவைகள் வந்து விட்டன.கிராம திருவிழாக்களில் எல்லாம் விதவிதமான தாவணிகள் அணிந்த, டீனேஜ் பெண்கள் கூடி கும்மாளிப்பர். பார்க்க வண்ணத்து பூச்சிகள் கூடி, மாநாடு நடத்துவது போலிருக்கும்.கண்ணிய தோற்றம் பெற, புடவை அணிவோர், லோஹிப் புடவை கட்டலை தவிர்ப்பர்; சிலர் பக்கவாட்டில் புடவையையும், ஜாக்கெட்டையும் சேர்த்து பின் செய்வர்.தமிழக பெண்கள், பண்பாட்டையும், கலாசாரத்தையும் ஒருபோதும் கை விட கூடாது; புடவை கட்ட தெரியாவிட்டால், அம்மா அல்லது பாட்டி மூலம் கற்றுக் கொள்ளவும். நான்கைந்து முறை முயற்சித்தால், புடவை கட்டுதல் கைகூடும்.மகளே... அரக்கு கலர் பட்டு பாவாடை கட்டி மாம்பழ நிற தாவணி உடுத்தி, அரக்கு கலர் பப் கை ஜாக்கெட் அணிந்து, ஜிமிக்கி மாட்டல் போட்டு, நெத்திசூடி வைத்து, ஒத்தை ஜடை பின்னி, தலை நிறைய பூ வைத்து, குஞ்சலம் கட்டி, கை நிறைய வளையல் பூட்டி, கால்களில் கொலுசுகள் மாட்டி, இடுப்பில் மெல்லிய ஒட்டியாணம் அணிந்து நடந்து வா! மதுரை மீனாட்சியே நேரில் வந்து தரிசனம் கொடுத்தது போலிருக்கும்; கற்பனை செய்து பார்க்க மெய் சிலிர்க்கிறது கண்மணி.- அன்புடன், பிளாரன்ஸ்.