உள்ளூர் செய்திகள்

பலாப்பழ இனிப்பு இட்லி!

தேவையான பொருட்கள்:பலாச்சுளை - 15பச்சரிசி - 200 கிராம் வெல்லம் - 100 கிராம்தேங்காய் துருவல் - 1 மூடி ஏலப்பொடி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பச்சரிசியை, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல், வெல்லம் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன், பொடியாக நறுக்கிய பலாச்சுளையையும் சேர்த்து, இட்லி மாவு பதமாக்கவும். அந்த மாவுக் கலவையில், ஏலப்பொடி சேர்த்து, நெய் தடவிய இட்லி தட்டில் உற்றவும். 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான, 'பலாப்பழ இனிப்பு இட்லி' தயார்.ஆவியில் வேக வைப்பதால், எல்லா வயதினரும் உண்ணலாம். மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்தை காக்கும்!- ப்ரேமி கிரிஜா ராமநாதன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !