உள்ளூர் செய்திகள்

கடைசி பெஞ்ச்!

நான் நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில், 1990 வருடம் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எங்களுக்கு திரு மீனாட்சி சுந்தரம் என்கிற ஆசிரியர் வரலாறு, புவியியல் பாடங்களை நடத்தினார்.அவர் எப்போதும் லாஸ்ட் பெஞ்சு மாணவர்களுடன் அமர்ந்தே தன் பணிகளை கவனிப்பார். பாடம் நடத்தும் போது, மட்டும் வகுப்பை சுற்றி நடந்து வந்து பாடம் நடத்துவார்.ஒருநாள், வகுப்புகளை கண்காணித்து வந்த தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருக்கை காலியாக இருந்ததால், வகுப்பறைக்குள் நுழைந்து ஒரு மாணவனிடம், 'ஆசிரியர் எங்கே?' என்று கேட்டார்.அப்போது, கடைசி பெஞ்சில் இருந்த ஆசிரியர் எழுந்து வந்து, தலைமை ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்தார்.'உங்கள் இருக்கையை விட்டுவிட்டு கடைசி பெஞ்சில் ஏன் அமர்கிறீர்கள்?' என கேட்டார் தலைமையாசிரியர்.அதற்கு ஆசிரியர், 'பொதுவாக வகுப்பில் கடைசி இரண்டு வரிசையில் உள்ள மாணவர்கள்தான் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இடையூறாக இருப்பர். நான் கடைசி பெஞ்சில் அமர்வதால் அவர்கள் பேசாமல் அமைதியாக வகுப்பை கவனிக்கின்றனர். என்னால் எளிதாக பாடம் நடத்த முடிகிறது' என்றார்.ஆசிரியரின் விளக்கத்தை கேட்ட பின் 'இந்த, 'அப்ரோச்' எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,' என்று ஆசிரியரை பாராட்டிச் சென்றார் தலைமை ஆசிரியர்!- நாதன், பத்தமடை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !