சிவந்த கை!
நார்வே நாட்டைச் சேர்ந்த 'ஹெரிமா ஒநீல்' என்பவர் கி.மு.1015ல் தன் வீரர்களுடன், அயர்லாந்தின் வடக்கு கடற்கரை பகுதியை கைப்பற்ற கடல் மார்க்கமாக வந்தார். இதே, நோக்குடன் மற்றொருவரும் இம்முயற்சியில் ஈடுபட்டார். இருவரிடை யேயும் ஓர் உடன்பாடு. யார் முதலில் புதிய பூமியில் காலடி பதிக் கிறார்களோ அவர்களே மன்னராக மகுடம் சூட்டப்படுவர் என்று.இரு கப்பல் படை களும் ஒரே சமயத்தில் நிலப்பகுதியைக் கண்டன. ஒநீலோடு போட்டியிட்டவர் தன் கப்பல்களை முன்னேறும்படி முடுக்கினார். நாடு தன் கை நழுவிப் போகும் நிலையை உணர்ந்த ஒநீல் ஒரு வியத்தகு செயலை புரிந்தார். அது என்ன தெரியுமா?தனது வலது கையை வெட்டி ரத்தம் ஒழுகும் அக்கையை கரையை நோக்கி வீசினார். போட்டியாளருக்கு முன்னால் ஹெரிமானின் கை அயர்லாந்தின் மண்ணில் போய் விழுந்தது. அவரே மன்னரானார்.அயர்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள இன்றைய அல்ஸ்டர் மாகாணமே அது. இவரிடமிருந்து பிறந்த ஒநீல் வம்சம் பல நூற்றாண்டு கள் அல்ஸ்டரை அரசாண்டது. இவர்களது அரச இலச்சினையாக வெள்ளியினாலான அமைப்பின் சிங்கங்களின் நடுவில் சிவப்பு நிற வலது கை பொறிக்கப்பட்டது.