வாழ்வை மீட்கும் வண்டிகள்!
நெருப்பை அணைக்க, சிறப்பான வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், மிக மோசமான தீமைகளில் நெருப்பு ஒன்று. நெருப்பு மக்களை கொல்லும்; காயப்படுத்தும். அதோடு ஏராளமான பொருள் சேதத்தையும் ஏற்படுத்தும். எல்லா நகரம் மற்றும் மாநகரங்களிலும் தேர்ச்சி பெற்ற தீ அணைப்பு வீரர்கள், இருபத்து நான்கு மணி நேரமும் தயாராய் இருப்பர்.தீ பற்றிய தகவல் கிடைத்த உடனேயே தீ அணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு தங்கள் தீ அணைப்பு வாகனங்களுடன் விரைந்து செல்வர். முதலில் அங்கு அபாயத்தில் இருக்கும் மனிதர்களையும், விலங்குகளையும் காப்பாற்றுவர். சொத்துக்களை காப்பாற்றுவர். நெருப்பை அணைப்பர். ஆம்புலன்ஸ் வண்டிகள் தீயால் காயமுற்றவர்களை மருத்துமனைக்கு எடுத்து செல்லும். அதோடு அவ்வண்டிகள் நோயுற்றவர்களையும் மருத்துவனைக்கும், பின் வீட்டிற்கும் எடுத்து செல்லும்.காப்பாற்றும் வாகனங்களான ஆம்புலன்ஸ், மற்றும் தீ அணைப்பு வண்டிகள் தயாராய் இருக்கும் தீ அணைப்பு நிலையம். இது போன்ற வாகனங்களில் மிகவும் ஈர்ப்பு உடையது தீ-அணைப்பு வண்டிகள். அதன் பளிச்சிடும் சிவப்பு வண்ணமும், குரோமியம் தடவப்பட்ட பாகங்களும் மிக மிக அழகான தோற்றத்தை தருகின்றன. அவசர எச்சரிக்கை 'சுழல் விளக்கு' மற்றும் 'சைரன் ஒலி'யுடன் இந்த தீ-அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க விரையும்போது எல்லாரும் அதனை பார்க்க சற்றே நின்றுவிடுவார். இந்த வண்டியின் மேலே 30 மீட்டர்கள் அல்லது அதற்கும் மேலே நீளும் பெரிய ஸ்டீல் ஏணி இருக்கும்.உயர்ந்த கட்டிடங்களில் நெருப்பில் சிக்கி கொண்ட மக்களை காப்பாற்ற தீ அணைப்பு வீரர்கள் இந்த ஏணியை பயன்படுத்துவர். வண்டியிலிருந்து கட்டிடத்தின் உயரம் வரை நீளும். குழாய் மூலம் மிக வேகமாக தண்ணீரை தீயின் மீது செலுத்தி அணைக்க முடியும். சில நெருப்பு வகைகள் தண்ணீரால் எளிதில் அணைக்க முடியாது. உதாரணமாய் எண்ணெய் மற்றும் பெட்ரோலால் ஏற்படும் தீ விபத்துக்களை அணைக்க சிறப்பான தீ அணைப்பு வண்டிகள் பயன்படுத்தப்படும். அவ்வண்டியில் இருக்கும் ரசாயன கலவை பீய்ச்சி அடிக்கப்படும். அந்த கலவை நெருப்பு பரவ தேவையான ஆக்ஸிஜனை தடுத்துவிடும். மின்சார தீயும் இதே போன்று அணைக்கப்படும். எந்த வகையான மின்சார தீயின் போதும், அதில் எக்காரணத்தை கொண்டும் தண்ணீரை ஊற்ற கூடாது. ஏனெனில், தண்ணீர் மின்சார கடத்தியாகும்.