உள்ளூர் செய்திகள்

ஞாபகசக்தி!

கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம், ஸ்ரீராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயத்தில், 1960ல், 6ம் வகுப்பு படித்தேன். ஆசிரியர்களை, அண்ணா என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவது அங்கு வழக்கம். வயதில் மூத்த ஆங்கில ஆசிரியர் ஒருவரை, 'மேட்டால்ஜி' என்பர். அவரது உண்மை பெயர், வகுப்பில் யாருக்கும் தெரியாது. முதல் நாள் நடத்திய பாடத்திலிருந்து மறுநாள் கேள்விகள் கேட்பார்; பல நேரம் பதில் சொல்ல தெரியாமல் விழிப்போம். அப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் அவரது, ஐந்து வயது மகனை துாக்கி வர, ஒரு மாணவனை அனுப்புவார். வந்ததும், அதே கேள்வியை, அந்த சிறுவனிடம் கேட்பார்; மழலைக் குரலில், மிகச்சரியாக சொல்வான்.'உங்களுக்கு நடத்திய பாடத்தை, நடைப்பயிற்சியின் போது, இவனுக்கும் சொன்னேன்...' என்பார். பின், சிறுவனிடம், 'எல்லார் தலையிலும், ஒரு குட்டு வை...' என்பார். சிலமுறை குட்டியதும், 'அப்பா... கை வலிக்குது...' என நிறுத்தி விடுவான். ஒருவர் மாற்றி மற்றொருவரை குட்டிக் கொள்ளச் சொல்வார்; அதை முறையாக செய்யாவிட்டால், அவரே குட்டு வைப்பார்.தற்போது, என் வயது, 71; அந்த சிறுவனின் அபார ஞாபக சக்தி, இன்றும் ஆச்சர்யம் தருகிறது.- பொன்.பிரபாகரன், விருதுநகர்.தொடர்புக்கு: 97893 08240


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !