உள்ளூர் செய்திகள்

தினை எள்ளு உருண்டை!

தேவையான பொருட்கள்:தினை அரிசி - 1 கப்கருப்பு எள் - 0.5 கப்முந்திரிப்பருப்பு - 0.5 கப்ஏலப்பொடி, வெல்லப்பாகு, நெய் - தேவையான அளவு.செய்முறை:தினை அரிசி, கருப்பு எள், முந்திரி பருப்பை மிதமான சூட்டில் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். இவற்றுடன் வெல்லப்பாகு, ஏலப் பொடி கலக்கவும்.இந்த கலவையுடன், சூடான நெய் தொட்டு, உருண்டைகளாக பிடிக்கவும். சுவை மிக்க, 'தினை எள்ளு உருண்டை' தயார். சத்து மிக்கது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.- உஷா முத்துராமன், மதுரை.தொடர்புக்கு: 99655 92216


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !