உள்ளூர் செய்திகள்

மித்து... எங்கே போன?

இங்கிலாந்தில் வசித்து வருபவர் கபார் அகமது. அவர் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் நல்ல புலமை வாய்ந்தவர். அவர் தனது ஆசைக்காக மித்து என்னும் ஆப்பிரிக்க கிரே வகைக் கிளியை வளர்த்து வருகிறார்.அந்தக் கிளி தன் எஜமானனைப் போலவே, இரண்டு மொழிகளிலும் பேசுவதோடு, நாய்போல் குரைக்கவும் செய்கிறது என்பது ஆச்சரியமான விஷயம். இங்கிலாந்திலேயே இரண்டு மொழி பேசும் கிளி அது மட்டும்தான் என்று அகமது பெருமைப்படுகிறார்.சமீபத்தில், அவருடைய கம்பெனிக்கு எடுத்துச் சென்ற போது காணாமல் போன மித்து, நான்கு நாட்கள் பிரிவிற்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து மித்துவை கணநேரமும் பிரியாமல் பாதுகாக்கிறார் அகமது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !