மம்மீஸ் ஹெல்தி கிச்சன்! - வெஜிடபிள் இட்லி!
முதலில், கோஸ், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின், வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், உளுத்து, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பின், ஒவ்வொன்றாக அனைத்து காய்களையும் போட்டு வதக்கி, இறக்கி, ஆறிய பின் இட்லி மாவில் கலந்து இட்லி சட்டியில் ஊற்றவும். வெந்தவுடன் இட்லியை சிறு சிறு துண்டுகளாக பிளேட்டில் வெட்டி வைத்து, புதினா சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.இந்த இட்லியில் அனைத்து காய்கறிகளும் சேர்ப்பதால், சத்து நிறைந்தது. தினமும், இட்லிதானா என சலித்து கொள்ளும் குழந்தைகள் கூட விரும்பி உண்பர்.குறிப்பு: அந்த இட்லியை வெட்டினோம் அல்லவா... அதை சிறிது எண்ணெயில் பொறித்து எடுத்தால், அதுவே வெஜி டபுள் இட்லி ப்ரை. பொறித்து எடுத்த இட்லி ப்ரையை வெங்காயம் தக்காளி இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி எடுத்து சாப்பிட்டால், 'சில்லி இட்லி' தயார்.- ஜி.சங்கீதா, திருவள்ளூர்