நம்பி இளம்பிறை நாதன்...
கடந்த, 1986ல், மதுரை மாவட்டத்திலுள்ள, பாப்பம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளயில், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு! பள்ளி திறந்த முதல் நாள் என்பதால், ஆசிரியர், எங்கள் பெயரை சொல்ல சொன்னார்.ஒரு மாணவன் எழுந்து, 'என் பெயர் நம்பி இளம்பிறை நாதன்...' என்றான். 'உன் பெயருக்கு என்ன விளக்கம்...' என கேட்டார் ஆசிரியர்.உடனே, அம்மாணவன், 'நம்பி என்பது இந்து சமயப் பெயர்; இளம்பிறை என்பது இஸ்லாமியர்கள் வழிபடும் பிறை; நாதன் என்பது, இயேசு நாதரை குறிக்கும்; என் தந்தை தமிழாசிரியர் என்பதால், இப்படி ஒரு பெயரைச் சூட்டியுள்ளார்...' என்றான்.ஆசிரியர், அவனைப் பாராட்டினார்; நாங்களும் கை தட்டி மகிழ்ந்தோம்!- கா.தேவ அன்புராஜ், மதுரை.