பேரீச்சம் பழம்!
பேரீச்சம் பழம் சக்தி மிக்கது. இரும்பு, புரோட்டின், நார்ச்சத்து, கால்ஷியம், மெக்னீஷியம், வைட்டமின் - பி6 போன்ற சத்துக்கள் உடையது. எங்கும், எளிதாக கிடைக்கும். அதன் பயன்களை பார்ப்போம்... * பேரீச்சம் பழத்துடன், பாதாம் பருப்பை, பாலில் கொதிக்க வைத்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி சீராகும்* இரவு படுக்கைக்கு செல்லும் முன், பாலில் பேரீச்சம் பழம் கலந்து பருக மன பலம் கூடும்; மூளை பலப்படும்* பேரீச்சம் பழத்துடன் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டால், கண்ணில் கருவளையம் நீங்கும்* உடல் இளைத்திருப்போர், தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட வலிமை பெறலாம்* பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும்* இதயம், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கும்* காலையில் பேரீச்சம் பழம் உட்கொண்டால் குடல் புழுக்கள் அழியும்.இனிப்புச் சுவையுள்ள பேரீச்சையை நாளும் உண்போம்!- சி.ஆர்.ஹரிஹரன்