உள்ளூர் செய்திகள்

பெரிய்ய... மரம்!

உலகின் மிக பிரமாண்ட மரம் என உலகின் வெவ்வேறு பகுதிகளில் பல மரங்கள் சொல்லப் படுகின்றன. 1853ம் ஆண்டில் கலிபோர்னியா விலிருந்து கிழக்கு அமெரிக்க நாடுகளுக்கு திரும்பி வந்த வேட்டையாளர்கள் தாங்கள் கண்ட மிகப்பெரிய மரங்களை பற்றி சொன்ன கதைகள் யாராலும் நம்பும்படி இல்லை. கிழக்கு அமெரிக்காவிலிருந்து கிளம்பிய ஒரு குழு அங்கு சென்று ஆராயும்வரை யாரும் நம்ப வில்லை. அது ஒரு 'செக்குயோயியா' மரம்.அதன் சுற்றளவு எம்மாம் பெரிசுன்னா, 'அத்த' நாலு பேர் வெட்ட 22 நாட்கள் ஆனது. இது போல சரித்திரத்தில் ஏராளமான பெரிய மரங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக, குறிப்பிடுகையில், மரங்கள் அடி மரத்தின் சுற்றளவு, உயரம் ஆகியவை கொண்டு அளக்கப்படுகின்றன. பயன்பாட்டிற்கான மர தேவையை பெரிய அளவில் பூர்த்தி செய்வதால் சில மரங்கள் பிரமாண்ட மரங்களென குறிக்கப்படுகின்றன. ஆனால், இந்த மரம் உலகிலேயே மிக பிரமாண்ட மானது என்று ஒரே ஒரு மரத்தை சொல்வது என்பது இயலாத காரியம். ஒரு மரத்தை உதாரணத்திற்கு எடுத்து கொண்டு பார்த்தால், அதன் அடி மர சுற்றளவு மற்றைய மரங்களை விட மிக பெரியதாக இருக்கலாம். அதற்காக அதனை பிரமாண்டம் என்று சொல்ல முடியாது. எது எப்படியோ இங்கே இருக்கும் எல்லா மரங்களுமே பிரமாண்டம் என குறிப்பிட தகுதி பெற்றவைதான்.செக்குயோயிய டென்டிரான் ஜைஜான்டீயம் என்றால் மிக பெரிய மரம் அல்லது பிரமாண்ட செக்குயோயியா என்று பொருள். உலக மர வகைகளில் இதனையே பெரும்பாலும் மிக பெரியது என குறிக்கின்றனர். கலிபோர்னியாவை சேர்ந்த ஜெனரல் ஷெர்மன் மரம் இவற்றில் மிக பெரியது. (உயரமானது அல்ல) இதன் உயரம் 83 மீட்டர், விட்டம் 11 மீட்டர்களாகும். ஐந்து அறை வீடுகள் 80 கட்ட தேவையான மரத்தை இது தருமாம்.கபோக் அல்லது சீய்பா மரம் தனது கீழ்பகுதியை விட பிரமாண்டமாக 9 மீட்டர் அகன்று இருக்கும் அடி மரத்தை கொண்டுள்ளது. இந்த மரத்தின் தரையில் பதிந்து இருக்கும் பகுதியை விட அடி மர சுற்றளவு பெரிதாகும். அடிமரத்தின் விட்டம் 50 மீட்டர். இந்த மரத்தின் விதைகளுடனான பழத்தின் கம்பளியானது தலையணை, தூங்கும் பைகள், உயிர் காக்கும் உடைகள் மற்றும் சத்தத்தை தடுக்கும் இன்சுலேஷன் ஆகியவைகளில் பயன்படுகின்றன.கவ்ரி பைன் ரோமானியரின் பிரமாண்ட தூண்களினால் ஆன கட்டடம் போல் அடிமரத்தை போலவே முழு மரமும் 6 மீட்டர் குறுக்காக அகலம் கொண்டது. மரத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து 24 மீட்டர் தள்ளி இருக்கும் கிளையும் இதே அகலத்தில் இருக்கும். இதன் விலைமதிப்பற்ற மரத் தன்மையால் ஏராளமாக வெட்டப்பட்டு விட்ட இந்த மரங்கள் இன்று அதன் தோன்றல் இடமான நியூசிலாந்தில் வெகு குறைவாகவே காணப்படுமளவு ஆக்கிவிட்டது.வான்தொடும் மரங்கள்!உலகினில் வாழும் மிகப் பெரிய உயிரினிங்களில் மூன்று மர வகைகள் குறிப்பிடப்படுகின்றன. இவைகள் எவ்வளவு உயரம் என்றால், வானையே ஒட்டடை அடிக்கும் அளவிற்கு இருக்கும். இதோ பக்கத்தில் இருக்கும் இந்த பிரமாண்ட யூக்கலிப்டஸ், டக்ளஸ் பிர், சிவப்பு மர செக்குயோயியா ஆகிய மூன்று இன மர வகைகள் அப்படிப்பட்ட மரங்களாகும். இவற்றில் மிக உயரமானது சிவப்புமர செக்குயோயியா, (இடது கடைசி). இந்த மர வகையில் கலிபோர்னியாவில் காணப்படும் மரம் 120 மீட்டர் உயரமானது.இந்த உயரத்தை அடைய இந்த வகை மரங்களுக்கு ஆண்டொன்றுக்கு 140 சென்டி மீட்டர் மழை தேவைப்படுகிறது. இரண்டாவதாக, 114 மீட்டர் உயரத்துடன் வருவது பிரமாண்ட யூக்கலிப்டஸ். இந்த மரம் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவிலிருந்து வந்தது. இந்த மரத்தின் அதிக எடையில்லாத தன்மை ப்ளைவுட் மற்றும் காகித கூழ் செய்ய பயன்படுகிறது. அடுத்து டக்ளஸ் பிர் மரம் 100 மீட்டர் உயரம் வளர்ந்து மூன்றா மிடத்தை பிடிக்கிறது. இது கடினத்தன்மைக்கு பெயர் பெற்ற மரமாகும். இந்த மரம் வடமேற்கு அமெரிக்க, அடர்ந்த காட்டுப் பகுதியில் வளர்கிறது. ஒரு தனி டக்ளஸ் பீர் மரம் பெரிய கப்பலின் பாய்மரமாக பயன் படுத்துமளவு பெரியதாக இருக்கும்.நான் ரொம்ப ஓல்டு!உலகின் பிரமாண்ட மரங்கள் வயதில் பெரும்பாலும் மிக வயதானவைகளே. ஜப்பானிய ஜோமான் சீடர் மரம், தன் அடிமரத்தின் சுற்றளவு 27 மீட்டர் கொண்டது. இது குறைந்தபட்சம் 3000 வருடங்களாக வாழ்கின்றன. சில செக்குயோயியா மற்றும் சீய்பா மரங்கள் 3000 முதல் 5000 வயது வரை இருக்கின்றன. ஆனால், இந்த பிரிஸ்டல்கோன் பைன் (இடது) மேலே சொன்ன மரங்களுக்கெல்லாம் வயதினில் தாத்தா என்றாலும் மிக அரிதாகவே 7.5 மீட்டர் உயரம் வளர்கிறது. கரணைகள் மற்றும் முடிச்சு போன்ற அமைப்புகள் கொண்ட இந்த மரம் காற்றால் அடிக்கப் பட்டும், வெள்ளை மலைகளிலிருந்து பாறைகள் தூவப்பட்டும் இத்தனை காலங்களாக மேற்கு அமெரிக்க பகுதியில் வாழ்கிறது.மிகப் பழமையான பிரிஸ்டல்கோன் பைன் வகை மரம் 'மெத்தூசெலேஹ்' மரமாகும். இதன் வயது 4,600 ஆண்டு களாகும். எகிப்தியர்கள் பிரமிடை கட்டுகையில் இந்த மரம் இளஞ்செடியாக ஏற்கனவே இருந்தது. மரத்தின் வயதினை கணக்கிடும் முறை சிக்கலானது மற்றும் தீர்மானமான அறிவியல் அல்ல.கார்பன் டேட்டிங் என்பது பெருவாரியாக பயன் படுத்தப்படும் முறையாகும். ரேடியோ அலைகள் மூலம் மரத்தின் கார்பன் அளவை அறிந்து அதன் மூலம் வயதினை சொல்லும் முறையாகும். எளிய வழியாக கருதப்படும் முறை என்பது மரத்தின் மையப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் உள்ள வளையங்களை கணக்கிடுவதன் மூலம் வயதினை சொல்வதே ஆகும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !