உள்ளூர் செய்திகள்

மாதுளம் பழம் சாதம்!

தேவையான பொருட்கள்:மாதுளம் பழம் - 2பெரிய வெங்காயம் - 1அரிசி - 250 கிராம்சீரகம் - 1 தேக்கரண்டிபன்னீர் - 100 கிராம்எண்ணெய், உப்பு, மிளகாய் துாள் - தேவையான அளவு.செய்முறை:மாதுளை முத்துக்களை, சாறாக்கி வடிகட்டவும்; இரண்டு தேக்கரண்டி எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போடவும். பின், சீரகம், மிளகாய் துாள் கலந்து நன்கு வதக்கவும். அதில், மாதுளை சாறை ஊற்றவும்; துண்டுகளாக்கிய பன்னீரையும் போடவும். நன்றாக கொதித்தவுடன், சுத்தம் செய்த அரிசி, தேவையான உப்பு போட்டு நன்கு கிளறவும். மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கவும். சூடான, 'மாதுளம்பழம் சாதம்' தயார்.சத்து மிக்கது, சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர். உடல் நலத்தை காக்கும்.- மாயாபிரபு, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !